கலைஞரின் சட்டமன்ற உரைகள்
209
உத்தமபாளையம் தாலுகாவில் சின்னமனூரில் குருசாமி என்பவர் அண்ணா தி. மு. க. அமைப்பாளரை 8-11-1973 அன்று சோனைமுத்து மற்றும் சிலர் கடத்திச்சென்று கழுத்தை நெறித்து கொலை செய்து ஆற்றில் போட்டுவிட்டார்கள். இதுபற்றி புகார் செய்தும் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சொன்னார்கள். மதுரை தி. மு. க. செயலாளர் பொன் முத்துராமலிங்கம் தலையிட்டு மேல் நடவடிக்கை எடுக்கத் தடை செய்துள்ளாரா என்று அவர்களுடைய அதிகாரபூர்வமான கட்சிப் பத்திரிகையில் வந்த செய்தியை இங்கே அவர் சொன்னார்.
விசாரித்துப் பார்த்தால் அந்த குருசாமி உயிரோடு இருக்கிறார். (பலத்த கைதட்டல்) என்ன விவரம் என்றால். அ. தி. மு. க. உறுப்பினர் குருசாமியை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்று காவல் துறையினருக்கு வந்த தந்தியின் மீது விசாரணை நடத்தப்பட்டது. அந்தத் தந்தியை அனுப்பியிருந்த சோனைமுத்துவிற்கும் குருசாமிக்கும் இடையே உறவு சீராக இல்லை. அதற்குக் காரணம் சோனைமுத்து தன் மனைவியை அடித்துக்கொடுமைப்படுத்துவதை குருசாமி - சோனைமுத்துவின் மாமனார் மாமியாருக்குத் தெரிவித்துவிட்டார் என்ற ஒரு எண்ணம் சோனைமுத்துவிற்கு தோன்றியிருந்ததுதான் காரணம் என்று அறியப்பட்டது. சோனைமுத்து தன்மீது கொண்டுள்ள ஆத்திரம் குறையும்மட்டும் எங்காவது சென்றுவரலாம் என்று கருதிய குருசாமி யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பெரியகுளத்தில் உள்ள தன் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்று தங்கியிருக்கிறார். 8-11-1973-ல் இவர்களுடைய கட்சிப் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது இவர் கொல்லப்பட்டார் என்று. 25-11-1973 அன்று கிராமத்திற்கு அவர் திரும்பிவந்துவிட்டார். ஹாண்டே அவர்கள் பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்து தவறான விளக்கம் கேட்டார். அவருக்கு விளக்கம் சொன்னேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.
அதேபோல் இன்னொன்றும் அவர் சொன்னார். கம்பத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் கொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தியைச் சொன்னார்கள். 11-3-1974 அன்று தன்னுடைய மகன் குப்புசாமி இரவு 9.45 மணிக்கு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டான் என்று அவன் தாய் கம்பம்
8 - க.ச.உ. (கா.து.)
காவல்