210
காவல்துறை பற்றி
நிலையத்திற்குச் சென்று ஒரு புகாரைக் கொடுத்தார். அது குறித்து கம்பம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. வேதியல் பரிசோதனைக்காக உடலுறுப்புகளின் பாகங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. இறப்பைப்பற்றிய கருத்து தெரிவிப்பது வேதியல் பரிசோதனையின் முடிவுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே தாயார் விஷம் குடித்து மகன் இறந்தான் என்று போலீஸில் அவர்கள் புகார் செய்திருக்கிறார்கள்.
டாக்டர் எச். வி. ஹாண்டே : முதல் அமைச்சர் அவர்கள் அங்கே விஷம் குடித்து அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொன்னார்கள். எங்களுக்குக் கிடைத்திருக்கிற தகவல் மூட்டைப் பூச்சி மருந்து ஊற்றி தற்கொலை செய்துகொண்டார் என்பது தவறான எண்ணம். அவர் தாயார் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். அதேமாதிரி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தகப்பனார் அவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. என்கொயரி கமிஷன் ரிப்போர்ட்டில் அதற்கு மாறாகவும் இருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒரு கேஸை எடுத்துக்கொண்டு, உங்களுக்குச் ச் சாதகமாக இருக்கக்கூடியதை சொல்வதில் பயன் இல்லை. என்னிடம் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. முழுமையாகச் சொல்ல நேரம் இல்லை. அவர்கள் கேட்டால் கொடுக்கத் தயாராயிருக்கிறேன். காழ்ப்புணர்ச்சியை வளர்க்கக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். அண்ணா தி. மு. க. மீது காழ்ப்புணர்ச்சி வளரக்கூடாது, தி. மு. க. விற்கும் அண்ணா தி. மு. க. விற்கும் இடையே இந்த மாதிரியான சண்டை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் சொல்கிறேன்.
-
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : எனக்கிருக்கிற சங்கடமெல்லாம் உயிரோடு இருக்கிற ருக்கிற சட்டசபையைச் செத்துப்போன சட்டசபை என்று சொல்கிறீர்கள் உயிரோடு இருக்கிற குருசாமியைச் செத்துவிட்டார் என்று சொன்னால் எப்படிக் கொலைகாரனைக் கண்டுபிடிப்பது என்பதுதான். . .
டாக்டர் எச். வி. ஹாண்டே : உதயகுமார். . .
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : உதயகுமாரைப் பற்றி நான் சட்டசபையில் என்னென்ன பேசினேன் என்பது