214
காவல்துறை பற்றி
செய்து இருக்கிறார்கள். விசாரணை நடைபெற்று வருகிறது. அது வேறு விவகாரம்.
அவர் 12-ம் தேதி பலவந்தப்படுத்தப்பட்டார். நான் வழக்கில் நுழைய விரும்பவில்லை. 13-ம் தேதி இரவு 14-ம் தேதி விடியற்காலை அவர் இறந்து இருக்கிறார். அதற்குப் பிறகு பிணம் புதைக்கப்பட்டுவிட்டது
முஸ்லீம் லீக் தலைவர்கள் திருப்பூர் மொய்தீன் அவர்கள் தலைமையில் என்னைச் சந்தித்து மேலும் இதுபற்றி விசாரிக்க வேண்டும், பிரேத பரிசோதனை நடைபெற்றாக வேண்டுமென்று கேட்டார்கள்.
உடனே நான் அவர்களையும் அங்கே போகச்சொல்லி திரு. லத்தீப், வகாப், ஜப்பார் ஆகியோர் சென்றதாக நினைவு அவர்களுக்குத் தேவையான உதவிகளையெல்லாம் அதிகாரிகளைக் கொண்டு கொடுக்கவேண்டுமென்று சொன்னேன்.
அவர்கள் சென்று பார்த்தார்கள், பிரேதம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத விசாரணை நடைபெற்றது.
டாக்டர்கள் பிரேத விசாரணைக்குப் பிறகு சொல்லி இருப்பது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இருக்கிறது. இது முறிந்த ஒரு வினாடிக்குள் உயிர் போய்விடும். இது டாக்டர்களுடைய அபிப்பிராயம். 12-ம் தேதி பலாத்காரச் சம்பவம். 13-ம் தேதி இரவு இறந்திருக்கிறார். இறக்கும்போது கூட இருந்தது கணவர்தான். ஆகவே, கணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எப்படி இருப்பார்கள்.
ஒரு உறுப்பினர் இங்கே பேசும்போது ஞாயிற்றுக்கிழமையே அவரிடம் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வாக்குமூலம் வாங்கப்பட்டதாகச் சொன்னது மிக மிகத் தவறாகும். 28-1-1974 திங்கட்கிழமை அன்றுதான் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்பதைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு. கே. டி. கே. தங்கமணி : மணி இப்பொழுது 1.30-க்கு மேலாகிறது, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ?