பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

காவல்துறை பற்றி

திட்டவட்டமான புலன் விசாரணைகளுக்குப் பிறகு உரிய வழக்குகள் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் மீது நிச்சயமாகத் தொடுக்கப்படும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்வேன்.

ஒவ்வொரு மானியக் கோரிக்கையை விவாதிக்கிற

நேரத்திலும் சொல்லப்பட்டுள்ள எல்லாக் கருத்துக்களுக்கும் பதில் அளிக்க எனக்கு நேரமில்லாவிட்டாலும் அந்தந்தக் துறையினுடைய அமைச்சர்கள், அந்தந்த துறையினுடைய அதிகாரிகள் இந்த விவாதத்தைக் கவனிக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற காரணத்தால் அதற்கான வழிவகைகளை ஆராய்ந்து சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால் உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைவரும் கடமைப்பட்டிருக்கிறார்கள், அதிகாரிகள் உள்ளிட்டு என்பதையும் நான் இந்த அவையில் கூறிக்கொள்வேன்.

நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள் பிரிட்டிஷார் காலத்திலிருந்தே காவல் துறை நிர்வாகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, நாங்கள் என்ன புதிதாக இதிலே செய்துவிட்டோம் என்றெல்லாம் கேட்டார். நான் சில புள்ளிவிவரங்களை அந்த அடிப்படையிலே அளிக்க வேண்டியது அவசியமாகும்

1969-1970-ம் ஆண்டு வரையில் காவல் துறைக்காகச் செலவழிக்கப்பட்ட தொகை ரூ. 13,66,42,500 என்றிருந்தது. இந்த ஆட்சி அமைந்த பிறகு காவல் துறையினுடைய பொறுப்பை நான் எடுத்துக்கொண்ட பிறகு ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய், மூன்று கோடி ரூபாய் என்றளவிற்கு உயர்ந்து 1969-1970-ல் ஏறத்தாழ 131/2 கோடி ரூபாயாக இருந்த செலவு இன்று 1974-75-ல் ரூ.25,99,65,000 என்கின்ற அளவிற்கு அந்தச் செலவு வளர்ந்திருக்கிறது.

எப்படி இந்த அளவிற்கு அந்தத் தொகை உயர்ந்திருக்கிறது என்று பார்த்தால், காவல் துறையில் இருக்கிற அலுவலாளர்களுக்கு அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் அகவிலைப்படி உயர்வும் தரவேண்டுமென்று இந்த அரசு விரும்பியதன் காரணமாக, அவர்கள் தங்களுடைய உயிரையும் பணயமாக வைத்து ஈடுபடுகிற பணியில் இன்றைக்கு இருக்கிறவர்கள் என்ற காரணத்தால் அவர்களுடைய சம்பளத்தில் பல மாறுதல்களை நாம் செய்திருக்கிறோம்.