222
காவல்துறை பற்றி
எஸ்.பி. பதவி 1966-67-ல் 29-ஆக இருந்தது. இன்று 63 பதவிகளாக ஆக்கப்பட்டு இருக்கிறது
டி.எஸ்.பி. 146-ஆக இருந்தது. இன்று 174-ஆக உயர்ந்து இருக்கிறது.
இன்பெக்டர்கள் 369 என்று இருந்தது, இன்று 597 என்கிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.
க
எஸ்.ஐ. 1,545 ஆக இருந்தது, இன்று 1,904 ஆக உயர்ந்து இருக்கிறது.
ஏ.எஸ்.ஐ. 118 ஆக இருந்தவர்கள், 527 பேராக இன்றைக்கு, அந்த அளவுக்குப் பதவிகள் உயர்ந்து இருக்கின்றன.
போலீஸ் கான்ஸ்டேபிள்கள் 28,891 பேர் இருந்தார்கள், இன்று 36,642 பேர்.
ஆகவே, இந்தத் துறையிலே டெக்னிகல் லைன் என்ற அளவில் பணியாற்றும் 3,000 பேர் நீங்கலாக 1966-67-ல் 35,617 பேராக இருந்த இந்தத் துறை, இன்றைக்கு 1974-ல் 45,691 பேர் என்கிற அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.
இந்த அரசின் சார்பில் நாம் தொடங்கிய குடும்பப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலமாக இந்தத் துறையிலே உள்ளவர்கள் எந்த அளவுக்குப் பயன் அடைந்து இருக்கிறார்கள் என்பதையும் மன்ற உறுப்பினர்கள் மறந்து விடக் கூடாது. அரசு அலுவலாளர்கள் பணியில் இருக்கும்போது மறைந்து விடுவார்களானால் - இயற்கை எய்திவிடுவார்களானால், அவர்களுடைய குடும்பங்களுக்கு அரசின் சார்பில் 10,000 ரூபாய் நிதி உதவி அளிப்பது என்று அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 1,000 அரசு அலுவலாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் நாம் நிதி உதவி செய்து இருக்கிறோம். அந்த குடும்பங்களின் பாதுகாப்பிற்காக, அந்த 1,000 பேரில் காவல் துறையினர் 208 பேர் என்பதை நான் இங்கே தெரிவிப்பேன். இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 200 பேர் 300 பேர் இறந்து
விட்டிருக்கிறார்கள் என்றாலும் அப்போதெல்லாம் அந்தக் குடும்பங்கள் திக்குத் தெரியாமல்தான் நின்று கொண்டு இருந்தன.