கலைஞரின் சட்டமன்ற உரைகள்
223
ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ் காவல் துறையிலே உள்ள குடும்பத்தினர் மட்டுமே 208 குடும்பத்தினர் சென்ற ஆண்டு பயனடைந்திருக்கிறார்கள். அந்த ஊழியர்கள் மறைவிற்குப் பிறகு என்ற செய்தியை இந்த அவைக்குத் தெரிவிப்பதும் என்னுடைய கடமையாகும். நான் இந்தத்துறை பொறுப்பேற்றுக் கொண்டதும் போலீசாரின் நலன்கள், போலீசார் மேலும் தீவிரமாக பணியாற்றுவதற்காக இந்தத் துறைக்கென தனியாக ஒரு ‘போலீஸ் கமிஷன்' அமைக்கப்பட்டு, அது 133 சிபார்சுகளை அரசுக்கு செய்தது. அந்த 133 சிபார்சுகளில் 116 சிபார்சுகளை அரசு ஏற்றுக் கொண்டது. அவற்றில் இப்போது 41 சிபார்சுகள் நிறைவேற்றப் பட்டு விட்டன. மற்ற சிபார்சுகளும் படிப்படியாக நிறைவேற்றப் படும் என்பதை நான் அறிவிக்கிறேன்.
எல்லா சிபார்சுகளுக்கும் ஆகும் தொடர் செலவு ரூ. 2 கோடியே 81 லட்சம். தொடரா செலவு 6 கோடி என்கிற அளவுக்கு இருக்கும் இப்போது ஏற்றுக்கொண்டு இருக்கிற 41 சிபார்சுகளுக்கும் ஆகிற தொடர் செலவு 93 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய். தொடராச் செலவு ரூ. 18 லட்சத்து 5 ஆயிரம் என்பதையும் நான் இங்கே கூறிக்கொள்கிறேன்.
காவலர்களுக்கு தினப்படி, அவர்களின் உணவுப்படி இவைகளெல்லாம் ஏதோ ஹைதர் காலத்தில் இருந்ததைப் போல் இருக்கிறது என்று நண்பர் செழியனோ யாரோ சொன்னதாக நினைவு. அப்படி ஒன்றும் இல்லை. அவர்களுக்கு அந்தப்படிகள் எல்லாம் உயர்த்திக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. தினப்படி காவலர்களுக்கு 1.75 ஆக இருந்தது. இப்போது 3 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதைப்போலவே பாதுகாப்பிற்காக செல்கிற இடங்களில் உணவு செலவிற்காக அவர்களுக்கு 2 ரூ. 2.25 என்று முன்பு வழங்கப்பட்டது இப்போது ரூ. 4.50 காசு என்கிற அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பதையும் நான்
தெரிவித்துக்கொள்கிறேன்
வீட்டு வாடகைப் படியைப் பொறுத்தவரையில் கூட அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்ற குறைபாட்டை ஆளும்கட்சி சார்பில் பேசிய ஒரு நண்பர் இங்கே குறிப்பிட்டார்கள். வீட்டு வாடகைப்படி நகர்புறத்தில் இருக்கிறபோது,