பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

காவல்துறை பற்றி

இன்ஸ்பெக்டருக்கு 80 ரூ. என்றும், வெளியூர் சென்றால் இல்லை. இது 1970-க்கு முன்பு இருந்த நிலைமை. இப்போது ஒரு இன்ஸ்பெக்டர் நகர்ப்புறத்தில் இருந்தால் வீட்டு வாடகைப்படி 1970-ல் 80 ரூ.க்கு பதிலாக 150 ரூ. வெளியூரில் இருந்தால் 100 ரூபாய் என்றும் உயர்த்தியிருக்கிறோம்.

ரூ

எஸ்.ஐ.-க்கு நகர் புறத்தில் இருந்தால் முன்பு 60 ரூ இப்போது நகர் புறத்தில் வீட்டு வாடகைப்படி 100 ரூ. வெளியூரில் இருந்தால் முன்பு எஸ்.ஐ.-க்கு 50 ரூ. இப்போது 80 ரூபாய் என்று உயர்த்தியிருக்கிறோம்

தலைமைக் காவலர்களுக்கு நகர் புறத்தில் இருந்தால் முன்பு 20 ரூபாய். இப்போது 40 ரூபாய். வெளியூரில் இருந்தால் முன்பு 20 ரூபாய் இப்போது 30 ரூபாய் என்றும் மாற்றி யிருக்கிறோம்.

புதிதாக ஏற்படுத்திய முதல் நிலை காவலர்களுக்கு வீட்டு வாடகைப்படி நகர் புறத்தில் இருந்தால் 40 ரூபாய் என்றும் வெளியூர்களில் இருந்தால் 30 ரூபாய் என்றும் அளித்து, இரண்டாம் நிலை காவலர்களுக்கு நகர் புறமாக இருந்தால் 14 ரூபாய், வெளியூரில் இருந்தாலும் 14 ரூபாய் என்று இருந்தது. அதை இப்போது நாம் நகர் புறத்தில் இருந்தால் 30 ரூபாய் என்றும், வெளியூர்களில் இருந்தால் 25 ரூபாய் என்றும் மாற்றி யமைத்திருக்கிறோம்.

ஆக, இந்த வகையிலேயெல்லாம் அவர்களுடைய கஷ்டங்களுக்கேற்ற வகையில் நம்முடைய அரசு நிதி ஆதாரத்தையும் மனதில் வைத்துக்கொண்டு முடிந்த அளவிற்கு உதவிகளைச் செய்த காரணத்தினாலும், நவீன கருவிகளை அவர்களுக்கு வாங்கித் தருகிற காரணத்தினாலும் காவல் துறைக்கு 13 கோடி ரூபாயாக இருந்த செலவு இன்றைக்கு 25 கோடியைத் தாண்டியிருக்கிறது என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஆண்டுதோறும் காவலர்களை ஊக்கப்படுத்த, உற்சாகப்படுத்த, அவர்களுடைய வீரச்செயல்களைப் பாராட்ட அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் அன்று முதலமைச்சர் வழங்குகிற பதக்கங்கள் என்ற வகையில் விழா