கலைஞரின் சட்டமன்ற உரைகள்
225
ஏற்பாடு செய்யப்பட்டு, வெறும் பதக்கங்கள் வழங்குவது மாத்திரமல்லாமல், சிறப்புப் பணி புரிந்த காவலர்களாக இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாயும், சப்- இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயும், காவல் துறை டெபுடி சூப்பிரண்டுகளுக்கு 3 ஆயிரம் ரூபாயும், வீரச் செயல்கள் புரிந்தவர்களாக இருந்தால் அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் 3 ஆயிரம் ரூபாயும் அண்ணா பிறந்த நாளன்று, செப்டம்பர் 15-ம் தேதியன்று பதக்கத்தோடு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
3
இந்த வகையில் 1969-லிருந்து 1974 வரையில் 23 பேர் வீரப்பதக்கம் பெற்றிருக்கிறார்கள். 129 பேர் சிறப்புப் பதக்கம் பெற்றிருக்கிறார்கள். டி.எஸ்.பி.யோடு நின்று விடுகிறது இந்தப் பதக்கங்கள்.
எஸ்.பி.-களுக்கும் இது வேண்டுமென்ற முறையீடும் இருந்து வருகிறது. எஸ்.பி.-களுக்குப் பதக்கம் மாத்திரம் அளிக்கப்படும். பண முடிப்பு அளிக்கப்பட மாட்டாது என்பதையும் வருகிற ஆண்டிலிருந்து எஸ்.பி.- களுக்கும் வீரப் பதக்கம் அல்லது சிறப்புப் பதக்கம் - இவைகள் அளிக்கப்படும் என்பதை நான் இந்த அவையில் அறிவிக்கிறேன்.
நம்முடைய நண்பர் திரு. செழியன் பேசும்போதும் வேறு சில நண்பர்கள் பேசுகிற நேரத்திலும், இந்த போலீசார் எந்த வழக்கையும் கண்டுபிடிக்கவில்லை, எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை, என்ன செய்கிறது இந்த போலீஸ்? என்றெல்லாம் மிகுந்த ஆத்திரத்தோடு கேட்டார்கள். நான் சில விவரங்களைச் சொல்ல விரும்புகிறேன். மத்திய அரசு வெளியிடுகிற கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா தரப்பில் வெளியிடுகிற 'கிரைம்ஸ் இன் இண்டியா' புத்தகம் 1970 ஆம் ஆண்டு வரையில் வெளியிடப்பட்டதில் இருந்து சில குறிப்புக்களை சென்ற ஆண்டு இந்த அவையில் எடுத்துக் காட்டினேன்.
அதற்கடுத்து அவர்கள் வெளியிட்டிருக்கிற புத்தகம் 'கிரைம்ஸ் இன் இண்டியா' என்பது 1971ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் ஆகும். அதுதான் இதுவரையில் நம் கைக்குக் கிடைத்திருக்கிறது. மற்ற ஆண்டுகளுக்கான அந்தப் புத்தகம்