கலைஞரின் சட்டமன்ற உரைகள்
231
சின்னஞ்சிறியவர்கள், அவர்கள் எப்படி அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பதைக் கமிஷனர் அலுவலகத்தில் மறுபடியும் காட்சியாக ஆக்கிக் காட்டியிருக்கிறார்கள். அதை டெலிவிஷனில் கமிஷனர் அலுவலகத்தில் நான் சென்று பார்த்தேன், எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அந்த வழக்கை மிகத் திறமையாக நம் காவல்துறையினர் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அதைப் போலவே ஒரு அகில உலக ஏமாற்றுக்காரன் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு ஏமாற்றியவன் ஜெர்ரி லாய்டு என்பவன் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி, தொடர்ந்து இந்த ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருந்தான். நம்முடைய காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு, அவன்மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம்
முத்திரைத் தாள் வழக்கு என்ற வழக்கில் திறமையாக முத்திரைத் தாளை அச்சிட்டு, விற்பனை செய்து கொண்டிருந்தவர் களை நம் காவல்துறையினர் அவர்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் சென்னை நகரிலுள்ள அண்ணா நகரில் உள்ள ஒரு பங்களாவை சோதனை செய்ததில் இந்தக் கள்ள வில்லைக ளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, 15 பேருக்கு மேல் கைது செய்யப் பட்டு, ரூபாய் 1,17,165 மதிப்புள்ள நீதிமன்ற 5 ரூபாய் கள்ள வில்லைகளும், 1 ரூபாய் கள்ள வில்லைகளும் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது நம்முடைய காவல்துறை திறமைக்கு ஒரு சான்றாகும்.
அதைப் போலவே இன்னொரு கொள்ளை. கடந்த 4, 5 ஆண்டு காலத்தில் சென்னை மாநகரத்தில் 5-ஆயிரம் ரூபாய் களவு போய் விட்டது. 10-ஆயிரம் ரூபாய் காணாமல் போய்விட்டது என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருந்தது. இப்பொழுது செழியன் கூட 4-ஆயிரம் ரூபாய் வீட்டிலே காணாமல் போய்விட்டது என்று சொன்னார். அதைப் பற்றி விசாரிக்க வேண்டும்.
திரு. கோவை செழியன்: 4-ஆயிரம் ரூபாய் பெறுமான பாத்திரங்கள் திருட்டுப் போய் விட்டது என்று ஏற்கெனவே நான் போலீசுக்கு ரிப்போர்ட் செய்திருக்கின்றேன்.