பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

காவல்துறை பற்றி

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : செழியன் போலீசுக்கு ரிப்போர்ட் செய்கின்ற நேரத்தில் எல்லாம் அது கவனிக்கப் படுகிறது. ஒரு முறை அவர் ஏதோ பயங்கரமான டெலிபோன்கள் எல்லாம் வருவதாகச் சொன்னவுடன் அவருடைய வீட்டைச் சுற்றி போலீஸ் காவலே போடப் பட்டிருந்தது. அவருக்கே தெரியும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவர் வீட்டைச் சுற்றி போலீஸ் ஜீப் ரோந்து போய் கொண்டிருந்தது. ஆகவே செழியன் அல்ல, யார் தனக்கு ஆபத்து என்று எந்த எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தாலும், ஆளும் கட்சி, தோழமைக் கட்சி உறுப்பினர் யாராக இருந்தாலும் சரி, அப்படிப்பட்ட அறிவிப்புகள் வருமானால் உடனடியாக அது கவனிக்கப்படுகிறது. செழியன் அவர்கள் தனக்கு டெலிபோன் மூலம் ஆபத்து என்ற அறிவிப்பு வருகிறது என்று சொன்னவுடன், 2 காவலர்கள் போடப்பட்டார்கள். 2, 3 நாள் வரையில் அவர் வீட்டிற்கு முன்னால் காவல் இருந்தது. அவர் வீட்டைச் சுற்றி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு ஜீப் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தது. ஆகவே, தகுந்தப் பாதுகாப்பு அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அனந்தநாயகி அம்மையாருக்கும் கூட.

டாக்டர் எச். வி. ஹாண்டே : அனந்தநாயகி அம்மையாருக்கு இப்படி தொடர்கதைதான்.

திருமதி த. ந. அனந்தநாயகி : பழைய கதை; அப்போதே முடிந்துவிட்டது. புதிய தொடர்கதை என்று நீங்கள் ஆரம்பிக்கப்போகிறீர்கள்

டாக்டர் எச். வி. ஹாண்டே : அனந்தநாயகி, செழியன் இப்படி எல்லோருக்கும் நடந்தது. தொடர் கதை என்று சொன்னேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இப்படி ரூ 5 ஆயிரம் காணாமல் போய்விட்டது, ரூ. 10 ஆயிரம் காணாமல் போய்விட்டது என்ற தகவல் வந்தது. நான்கைந்து ஆண்டு காலமாக சென்னை நகரில் திருட்டைப் பற்றி தகவல் வந்து கொண்டே இருந்தது. அதை நம்முடைய காவல்