பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

காவல்துறை பற்றி

தாமஸ் நாடார் என்பவரைப் பற்றிச் சொன்னார். இந்த சிலை வழக்கில் 2, 3 முறை அவர் ஈடுபடுத்தப்பட்டு, விடுதலையும் ஆகியிருக்கிறார். இப்பொழுது தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்து பிரதோஷ நாயகர் சிலைத் திருட்டுச் சம்பந்தமாகக் குற்ற எண். 766/73-ல் தஞ்சாவூரில் பதிவு செய்யப் பட்டு, தஞ்சை காவல் துறையினரின் விசாரணையில் அது இருந்தது. அந்த விசாரணையில் புலன் ஏதும் கிடைக்கவில்லை. பிறகு அரசு இந்த வழக்கை சி. ஐ. டி. போலீசார் மூலம் விசாரிக்க வேண்டுமென்று கேட்டு, ஐ. ஜி. அவர்களுடைய உத்திரவின் பேரில் தமிழ் நாடு குற்றப் புலனாய்வுத் துறையினர், பெரிய கோவிலில் நடந்த பிரதோஷ நாயகர் சிலைத் திருட்டு வழக்கு விசாரணையை 3-1-1975 நாள் அன்று மேற்கொண்டார்கள். விசாரணையை சிறப்பாகச் செய்த குற்றப் புலனாய்வுத் துறையினர் துரைசாமி என்கின்ற சப் போஸ்ட்மாஸ்டர்-ஐ 24-2-1975 அன்றும், அவருக்குத் துணையாக இருந்த சேலத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை 20-3-1975 அன்றும் கைது செய்தார்கள். துரைசாமி மற்றும் ராமகிருஷ்ணன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் அம்மாப்பேட்டை காவல் நிலைய குற்ற எண். 459/73-ஐ 30-3-1975 அன்று பதிவு செய்து, அது சம்பந்தப்பட்ட தீபநாச்சியார் சிலையை சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ளது அதனைக் கைப்பற்றினார்கள். இவ்விருவர் வாக்குமூலத்தின் பேரில் கூகூர் சிவன் கோவிலில் இருந்த ஒரு சிலை களவாடியதாகக் கிடைத்த புலன் பேரில் நாச்சியார்கோவில் காவல் நிலைய குற்ற எண். 89/ 75 ஆக 8-3-1975-ம் தேதி பதிவு செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட சில எதிரிகள் தாமஸ் நாடாருக்கு விற்றதாக தகவல் கூற, அதன் பேரில் தாமஸ் நாடார் 8-3-1975-லிருந்து தேடப்பட்டு வருகிறார். அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து சிலையைக் கைப்பற்ற மேல் நடவடிக்கை எடுக்க முயற்சி நடைபெறுகிறது மேற்கொண்டு தகவல்கள் இருக்குமானால் நம்முடைய செழியன் தவறாக எடுத்துக்கொள்ளாமல் - அவர் எங்கேயிருக்கிறார் என்ற தகவலைச் சொல்லுவார்களானால் உதவியாக இருக்கும் தாமஸ் நாடாரை நான் கூடப் பார்த்திருக்கிறேன். பார்த்தவுடனே அடையாளம் தெரிந்து விடும் - ஆகவே செழியன் மாத்திரமல்ல, யார் வேண்டுமானாலும் அவரைப் பார்த்தவுடன் அவர் இன்ன

-