கலைஞரின் சட்டமன்ற உரைகள்
239
ஆனால் திரு. கே. டி. கே. சொன்னது, மலேஷிய மகாலிங்கம் விவகாரம்; இந்த விவகாரத்தில் கமிஷனர் இரண்டு முரண்பட்ட அறிக்கைகள் கொடுத்ததாகச் சொல்வது தவறாகத் தான்படுகிறது. நான் எல்லாப் பத்திரிகைகளையும் தேடிப் பார்த்தேன். அவர் 6-ந் தேதி இரவு கீழே விழுந்து இறந்தார் என்ற செய்தி பத்திரிகையில் வரும்போது, பத்திரிகைகளில் "மகாலிங்கம் கொலை” என்றுதான் தலைப்புப் போட்டார்கள். வந்த செய்தி பத்திரிகைக்குக் கமிஷனர் அப்படிச் சொன்னார் என்று வரவில்லை. பத்திரிகைச் செய்தி, மலேஷிய மகாலிங்கம் கொலை என்று வந்ததே தவிர கமிஷனர் சொல்லவில்லை. மகாலிங்கம் கொலை செய்யப்பட்டது பற்றி போலீஸ் கமிஷனர் சொன்னது, “பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் இதுபற்றி எதுவும் கூற முடியும்; அவர் உடலில் வெளிக் காயங்கள் இல்லை என்றாலும் உள் காயங்கள் இருக்கிறதா என்பது பிரேத பரிசோதனையின் போது தெரியும்" என்று கமிஷனர் கூறியிருக்கிறார்.
அதற்குப் பிறகு பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனையில் பஞ்சாயத்தார் மேலே இருந்து கீழே விழுந்து இறந்தார் என்று - பஞ்சாயத்தில் 5 பேர் இருந்தார்கள் - சொல்லி, அந்த பிரேதப் பரிசோதனை சர்டிபிகேட்டை வைத்து முடிவு செய்தார்கள். அந்த முடிவைத்தான் மறுபடியும் போலீஸ் கமிஷனர், மலேஷிய மகாலிங்கம் செத்தது எப்படி என்று நிருபர்கள் கேட்க, அவர்களுக்குப் பதில் அளித்திருக்கிறார்களே அல்லாமல், கொலை என்று அறிவித்துவிட்டு மறுபடியும் தற்கொலை அறிவித்தார் என்று கூறுவது பொருத்த முடையது அல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று
இன்னொன்றும் திரு. தங்கமணி அவர்கள் சொன்னார்கள். "மலேஷிய மகாலிங்கம் கொலை செய்யப்படுகிறார்; கமிஷனர் அறிவிக்கிறார் கொலை என்று. மறுநாள் தற்கொலை என்று கமிஷனர் அறிவிக்கிறார், அதற்கு மறுநாள் அவர் அடிஷனல் ஐ. ஜி. ஆகிறார்”. என்று கே. டி. கே. அவர்கள் பேசியிருக்கிறார்கள். கே. 19. கே. தங்கமணி போன்றவர்கள் இப்படிப் பேசுவதுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது,
அடிஷனல்