பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

காவல்துறை பற்றி

ஆனால் அதிலே தரப்பட்டிருக்கிற குறிப்புகளை மாத்திரம் இங்கே படிக்க விரும்புகிறேன்.

1. இரண்டு தனிப்பட்ட நபர்களிடையே எழுந்த ஒரு சாதாரண பூசல் அரசியல் காரணமாக அசாதாரணமாக மிகைப் படுத்தப்பட்டு அரசியல் லாபம் கருதி தேவையற்ற முறையில் காவல் துறையினர் மீதும், ஏதுமறியாத மற்றவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது

2, 12-5-1973 அன்று காவல் துறையினர் பெரியகுப்பம் கிராம மக்களைத் துன்புறுத்தியதாகவும், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும், அக்கிராமத்துப் பெண்களை மானபங்கம் செய்ததாகவும், கற்பழித்ததாகவும் கூறப்பட்ட புகார்கள் தகுந்த

ஆதாரமற்றவையாதலால் வேண்டியவையாகும்.

அவைகள் நிராகரிக்கப்பட

3. 13, 14 மே 1973 ஆகிய நாட்களில் போலிசார் பெரிய குப்பத்தில் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆதலால் அக்குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள இயலாததாகும்.

4. திரு. மதுராந்தகம் ஆறுமுகம், எம். எல். ஏ., திரு. செய்யூர் பாலகிருஷ்ணன் ஆகிய தி.மு.க. பிரமுகர்களை இச்சம்பவங்களில் சம்பந்தப்படுத்தியது தேவையற்றதும், நியாமற்றதும், அரசியல் நோக்கமுடைய செயலாகும்.

5. கிராம மக்களுடைய உடைமைகளுக்குச் சேதம் விளைவித்ததற்கு காவல் துறையினர் பொறுப்பாளிகள் என்று கூற முடியாது. அச்செயல்களை விஷமிகளும், சமூக விரோதிகளும் செய்திருக்கக்கூடும்.

மேலும் இக்குழு கீழ்க்கண்ட பரிந்துரைகளை அரசுக்குக் கூறியுள்ளது

1. பெரியகுப்பம் கிராமம் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ளது. அதற்குச் சரியான போக்குவரத்து வழிகள் அமையாததால் இத்தகைய சம்பவங்கள் நிகழ எதுவாகிறது. எனவே அவ்விடத்திற்கு அருகில் பக்கிங்ஹம் கால்வாயைக் கடப்பதற்கு வசதியாக தேவையான இடங்களில் பாலங்கள் அமைக்க வேண்டும்.