பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

கும்

243

2. கடற்கரையோரப் பகுதிகளாகிய இவ்விடங்களில் கிராமங்களில் பாதுகாப்பிற்காக ஒன்று அல்லது இரண்டு காவல் நிலையங்களை (அவுட் போஸ்டுகளை) அமைக்க வேண்டும்.

3. இந்நிகழ்ச்சியில் கிராம முன்சீப் யாதொரு அக்கறையும் காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

4. இம்மாதிரி நிகழ்ச்சிகளின்போது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் உயர்மட்ட அதிகாரிகள் நிகழ்விடங்களுக்கு உடனடி யாகச் செல்வது நிலைமையைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் உண்மையான செய்தியை வெளிப்படுத்தவும் உதவும்.

விசாரணை ஆணைக் குழுவின் தீர்ப்புகளை அரசு ஏற்றுக்கொண்டு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இவைகள் இந்த அவையில் வைக்கப்படும்.

பாளையங்கோட்டை சம்பவம் பற்றி வைக்கப்பட்ட அறிக்கைக்கு நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது என்று திருமதி. அனந்தநாயகி அம்மையார் கேட்டார்கள். அங்கே ஒன்பது நபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் 17-3-1973 அன்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 பேர்கள் மீது திருநெல்வேலி தலைமை மாஜிஸ்ட்ரேட் முன்பாக தொடர்ந்து வழக்கு நடத்தப்பட்டது. திருநெல்வேலி தலைமை மாஜிஸ்ட்ரேட் 27-12-1974 அன்று இன்ஸ்பெக்டருடைய மகன்கள் மோகன்குமார், வசந்தகுமார் மற்றும் காவலர்கள் ஆகியோரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மோகன்குமாரும், வசந்தகுமாரும் குற்ற வாளிகள் நன்நடத்தை சட்டத்தின் 4(1) விதியின் கீழ் விடுவிக்கப் பட்டனர். நான்கு காவலர்களுக்கு மூன்று மாத கால அளவுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு தலைமைக் காவலர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யலாம் என நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். அதை அரசு பரிசீலித்து வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.