கலைஞரின் சட்டமன்ற உரைகள்
247
ஆகவே, சாதி ஒழிய வேண்டுமென்பதை உதட்டளவிலே உச்சரிக்கின்ற வார்த்தையாக வைத்துக் கொள்ளாமல், உள்ளத்திலே பதிய வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆளுங் கட்சியிலே இருக்கிறவர்களையும் கேட்டுக்கொள்வேன், எதிர் கட்சியிலே உள்ளவர்களையும் கேட்டுக்கொள்வேன், தோழமைக் கட்சியிலே இருக்கிறர்வளையும் கேட்டுக்கொள்வேன். சமுதாயத்திலே இருக்கிற அத்தனை பேரையும் கேட்டுக் கொள்வேன். அதன் காரணமாக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட கலவரங்களானாலும், சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் ஏற்பட்ட கலவரமானாலும், உள்ளபடியே சகித்துக் கொள்ளத் தக்கதல்ல. அவைகளைப் பற்றி மேலவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. இராசாராம் நாயுடு அவர்கள் கூட மேலவையில் அதற்காக ஒரு அதிகாரியை வைத்து விசாரணை வைக்கக் கூடாதா என்று கேட்டார்கள். அதையெல்லாம் மனதிலே கொண்டு, இங்கே பேசிய உறுப்பினர்களின் கருத்துக்களை மனதில் கொண்டு, அந்தச் சம்பவங்களைப் பற்றி விசாரிப்பதற்காக ஐ. ஜி. அவர்களை அதற்காக, நியமித்து, அவரை அதற்காக ஒரு அறிக்கை அனுப்ப வேண்டுமென்று இந்த அரசு கேட்டுக்கொண் டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கீழ் வெண்மணிச் சம்பவம், பற்றிச் சொன்னார்கள். அந்தத் தீர்ப்பினால் கீழ்க்கோர்ட்டில் தண்டிக்கப்பட்டவர்கள், உயர்நீதி மன்றத்தில், எல்லா எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். கே. டி. கே. அவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். இப்படி விடுதலை செய்தார்களே என்று. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு. ஏ. கே. சுப்பையா அவர்கள் இப்பொழுது பேசும்பொழுது கூடக் குறிப்பிட்டார்கள். பலரும் அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள். சம்பவம் நடந்தது உண்மை. ஆனால் அந்தச் சம்பவத்திலே குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் விடுதலை அடைந்திருக்கிறார்கள். அப்படி விடுதலை அடைந்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலே அப்பீல் செய்வதற்கு, Certificate
of leave to appeal உயர் நிதிமன்றத்தில் அரசின் தரப்பில் கேட்கப்பட்டது. உயர் நீதிமன்றம் அதை மறத்துவிட்டது. அப்படி மறத்துவிட்ட காரணத்தால், உச்ச நீதிமன்றத்திலே special leave petition 22-3-1975-லே பதிவு பதிவு செய்துள்ளோம்