பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

காவல்துறை பற்றி

படித்துப் பார்த்தபோது அப்படிப்பட்ட வார்த்தையே அதிலே இல்லை. தங்கமணி அவர்கள் மீது போடப்பட்ட கேசிலே கூட, செஷன்ஸ் ஜட்ஜ் 'மோடிவ்' அரசியலாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் என்று தங்கமணி இங்கே குறிப்பிட்டார். தங்கமணி போன்ற பெரியவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் வயதைச் சொன்னால் கோபித்துக் கொள்வார்களோ என்னவோ பத்து ஆண்டுகள் என்னைவிட அதிகம், 61 வயது என்று ஆனந்தவிகடன் வெளியிட்டு இருக்கிறது, அப்படிப்பட்ட பெரியவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட தகவலை அவைக்குத் தருவது வேதனைக்குரியதாகும். அப்படி தங்கமணி அவர்கள் வழக்கில் நீதிபதி 'மோடிவ்' அரசியல் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அவர் ஆர். எஸ். மங்கலத்தில் பேசிய பேச்சு குறித்த வழக்காகும் அது. ஜட்ஜ் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்,

"The next point that arises for consideration is whether the words complained of bring home an offence under Section 115 read with Section 302 I.P.C. as alleged by the prosecution. If the speech complained of is translated into English, secording to me, will run as follows :-

"What is the way for the Chief Minister to escape from the enquiry? One way would be to commit suicide like Hitler or he should be beaten to death like Musolini by you all. Except these two courses I do not see any other way to put an end to the Chief Minister."

இது தங்கமணி அவர்கள் பேசிய பேச்சாகும். தங்க மணியைப் போன்றவர்கள் - ஒரு காலத்தில் என்னைப் பாராட்டிப் புகழ்ந்து பேசிய தங்கமணி போன்றவர்கள். என்னுடைய முடிவு இப்படி அமைய வேண்டுமென்று கருதுவார்களேயானால், அந்த முடிவை தங்கமணியைப் போன்றவர்கள் தங்களுடைய கையால் செய்வார்களேயானால். நான் உள்ளபடியே ஒரு தியாகியின் கையால் சாகிறேன் என்ற அளவில்கூட மகிழ்ச்சியடைவேன்.

திரு. கே. டி. கே தங்கமணி : தீர்ப்பில், அப்படிப் பேசியிருந்தாலும் அது குற்றமாக ஆகாது என்றுதான் இருக்கிறது,