254
காவல்துறை பற்றி
The words uttered by the accused are not capable of inciting the audience to commit the offence of murder nor could they be understood in the manner in which the prossecution has understood."
இந்தத் தீர்ப்பை என்னைப் படிக்க வைக்கும் அளவிற்கு தங்கமணி என்னை ஆளாக்கிவிட்டாரே என்பதற்காக மிகுந்த வருத்தப்படுகிறேன்.
திரு. கே. டி. கே. தங்கமணி : எந்தமாதிரியான கேஸ்கள் போடப்பட்டிருக்கின்றன? ஜட்ஜ்மெண்ட் எப்படியிருக்கிறது என்பது இந்த ரெக்கார்டில் இருப்பது பொருத்தமானதுதான்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தங்கமணி யைப் போன்ற பெரிய தலைவர்கள் எந்தமாதிரியாகப் பேசுகிறார் கள் என்பதும் இங்கே பதிவாக வேண்டியது மிகுந்த அவசிய மாகும்.
திரு. கே. டி. கே. தங்கமணி : எதிர்க்கட்சிக்காரர்கள் மீது எப்படிப்பட்ட கேஸ்கள் போடப்பட்டன என்பது ரெக்கார்டில் இருப்பதும் நல்லதுதான்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : எங்களுக் கெல்லாம் அண்ணா அப்படிச் சொல்லிக் கொடுக்கவில்லை ஹிட்லரைப் போல சாக வேண்டும்: முசோலினியைப் போல அடித்துக் கொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுக்கவில்லை, அப்படிப்பட்ட பண்பை நாங்கள் என்றைக்கும் பெற்றதும் கிடையாது. எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லாம் நீண்ட காலம் வாழ வேண்டுமென்றுதான் நாங்கள் கருதுவோம். அப்போதுதான் ஒருவருக்கொருவர் நம்முடைய அறைகூவலை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து, அதைப்பார்க்க வேண்டும். “அவனைக் கொன்றுவிட வேண்டும், விசாரணையிலிருந்து தப்புவதற்கு அவன் ஹிட்லரைப் போல தற்கொலை செய்துகொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார். ஆனால், ஜட்ஜ் கைதட்டலுக்காக (அப்ளாஸ்) அப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லியிருக் கிறார். இதே தங்கமணி அவர்கள் வாணி மகாலில் ஒரு முறை என்னைப் பாராட்டிப் பேசியதை நான் மறந்துவிடவில்லை. அப்படிப் பேசிய தங்கமணிதான், இப்படிப் பேசியிருக்கிறார். தங்கமணி