பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

காவல்துறை பற்றி

முறையிலே செயல்பட அவை ஏதுவாக உள்ள கருத்துக்காளக அமைந்து இருக்கின்றன என்று சொல்லி இந்த அளவிலே அமைகிறேன். வணக்கம்

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : எஸ்டிமேட்ஸ் கமிட்டி ரிப்போர்ட்டிலே தீயணைப்புப் படை சம்பந்தமாக பரிந்துரை இருக்கிறதே, அதைக் கவனிப்பார்களா?

திருமதி. த. ந. அனந்தநாயகி : கராத்தே பயிற்சியை போலீஸாருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப் பயிற்சி நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் கொடுக்க இந்த அரசு முயற்சி எடுக்குமா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : கராத்தே பயிற்சியை நான்தான் முதல் முதல் பார்த்துவிட்டு, காவலர் களுக்குச் சிபாரிசு செய்து அந்தப் பயிற்சியைக் கொடுக்கச் சொன்னேன். இடையில் நிறுத்தப்பட்டு விட்டதாகச் சொல் கிறார்கள். எங்கே அதை எதிர்ப்பார்களோ என்று எண்ணியி ருந்தேன். அவர்களே சொல்லிவிட்ட காரணத்தினால் அது தொடர்ந்து நடைபெறும்.