பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

257

உரை : 11

நாள் : 23.18.1977

கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, அவையின் முன்னால் வைக்கப் பட்டு விவாதிக்கப்படுகின்ற, காவல் துறை மானியத்தின் மீது எங்கள் கழகத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிட முன் வந்துள்ளேன்.

காவல்துறை எப்போதுமே கடுமையான விவாதத்திற்கு ஆட்படும் என்ற காரணத்தால்தான், தீப்பொறி பறக்கும் என்ற காரணத்தால்தான் அதோடு இணைத்து தீ அணைக்கும் படையையும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தீ கிளம்புகிற நேரத்தில் அதை அணைப்பதற்கு தீ அணைப்புப் படை தேவைப்படுவதைப் போல் இரண்டையும் ஒன்றாக இணைத்து நீண்ட காலமாக இந்த மன்றத்தில் நாம் விவாதித்து வருகிறோம். அது இன்றைக்கும் தவறிவிடவில்லையென்பதற் கேற்ப நல்ல மாலை நேரத்தில் தொடங்கப்பட்ட இந்த மானியக் கோரிக்கை விவாதம் மிகச் சூடான அளவில் இதுவரையிலே நடைபெற்று இருதரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் மிக வேகமாகவும் கனல் வீசத்தக்க வகையிலும் இருந்தன என்பதை தாங்களும் இந்த அவையும் நன்றாக அறியும்.

காவல் துறையைப் பொறுத்தவரையில் சொல்லவேண்டு மேயானால் பேரறிஞர் அண்ணா அவர்கள் பொதுவாகச் சொன்ன ஒரு கருத்து அவர்கள் உருவாக்கிய கழகத்திற்கும் கழகத் தொண்டர்களுக்கும் என்று மாத்திரமல்லாமல் உலகத்திற்கும் உலக மக்களுக்கும் என்று சொன்ன ஒரு கருத்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கின்ற இந்த மூன்று சொற்களுக்கும் மதிப்பளித்து நடைபெறவேண்டிய ஒரு துறை காவல் துறையாகும். கடமை உணர்ச்சியோடும் அந்தக் கடமை உணர்ச்சியை அவர்கள் உள்ளத்திலே ஏந்தி பணியாற்றுகிற நேரத்தில் எத்தகைய