258
காவல்துறை பற்றி
தீமைகளை, இடர்ப்பாடுகளை, ஏன் உயிருக்கே ஆபத்து வரத்தக்க நிலைமைகள் ஏற்பட்டாலும் அந்தக் கடமையிலிருந்து காவல் துறையினர் தவறாது இருக்கவேண்டும் என்பதையும் அதே நேரத்தில் அவர்கள் தங்களுக்கு என்று அமைந்துள்ள பொறுப்புக்களை கண்ணியத்தோடு நிறைவேற்றவேண்டும் என்பதையும் அதே நேரத்தில் கட்டுப்பாடு உணர்ச்சியோடு அவர்களுடைய பணி நடைபெற வேண்டும் என்பதனையும் காவல் துறையில் இருக்கிற பலரும் உ உணர்ந்து நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்னமும் என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்துகொண்டிருக்கிறது.
ஆளும் கட்சி சார்பிலும் எதிர்க்கட்சி சார்பிலும் இங்கே விவாதங்கள் நடைபெற்றபோது காவல்துறையினர் ஆங்காங்கு தவறுதலாக நடந்து கொண்டார்கள் என்றெல்லாம் விவரிக்கப்பட்ட நேரத்தில் இந்த பெரிய துரை ஏறத்தாழ 45,000 பேர்கள் ஈடுபட்டுள்ள இந்த பெரிய துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலபேர் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை.
நேற்றையதினம் ஒரு ஒத்தி வைப்புத் தீர்மானம் வந்த போது நம்முடைய அவையின் முன்னவர் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தன்னுடைய கருத்தாகவும் முதல்வர் கருத்தாகவும் தெரிவிக்கின்ற வகையில், ஒன்றை சொன்னார்கள். காவல்துறையில் இருக்கின்ற அனைவரும் அல்ல, குறிப்பிட்ட ஒரு பகுதியினர் இந்த ஆட்சிக்கு களங்கம் கற்பிக்கவேண்டும் என்கின்ற வகையில் இப்படிப்பட்ட தவறான செயல்களில் ஈடுபட் டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சி சார்பிலும் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பிலும் எடுத்துச்சொன்ன கருத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டார்கள். எப்படி இன்றைக்கு இருக்கின்ற ஆளும்கட்சி சார்பில் நடைபெறுகின்ற காரியங்களுக் கெல்லாம் ஒரு சில குறிப்பிட்ட அதிகாரிகள்தான் காரணம் என்றும் வேண்டுமென்றே இவர்கள் களங்கப்படுத்துகிறார்கள் என்று கூறிக்கொள்கின்ற உரிமையை எடுத்துக்கொள்கிறார்களோ அதைப் போலவே முன்னால் ஆளும் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் களங்கம் வர வேண்டும் என்பதற்காக காவல் துறையில் ஒரு பகுதியினர் வேண்டுமென்றே இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்கின்ற வாதத்தை நான்