கலைஞரின் சட்டமன்ற உரைகள்
259
பதிலுக்காக எடுத்து வைப்பது பொருத்தம் உடையதுதான், அதை யாரும் மறுக்கமுடியாது என்பதையும் நான் எண்ணிப் பார்க் கின்றேன்.
இன்று ஆளும்கட்சி சார்பில் பேசிய உறுப்பினர்கள் பலரும் தாங்கள் எடுத்துக்கொண்ட நீண்ட நேரத்திற்கிடையே கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எவ்வளவு தொல்லைகள், எவ்வளவு கொடுமைகள் நடைபெற்றன என்பதையெல்லாம் மிக விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் .25 ஆயிரம் வழக்குகள் இன்றைய ஆளும் கட்சியினர், அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நேரத்தில் போடப்பட்டன என்றும் கூறப்பட்டது. மொத்தமாக குத்துமதிப்பாக 25 ஆயிரம், 26 ஆயிரம் என்று எடுத்துக் கூறுவது, அது சாதாரண மக்களை கவரக்கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால் இந்த 25 ஆயிரம் வழக்குகளின் புள்ளிவிவரங்கள் என்ன என்பதை இன்றைக்கு ஆளும்கட்சியில் உள்ளவர்கள் அதை எடுத்து இந்த அவைக்கு வைக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கின்ற காரணத்தால், இந்த 25 ஆயிரம் வழக்குகளும் எங்கு எங்கு போடப்பட்டன, எந்தெந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மீது என்கின்ற விவரங்களை எல்லாம் வைப்பார்களேயானால் அதுகூட ஆளும் கட்சிக்கு பயன்படக்கூடிய குறிப்பாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன்.
இங்கு பேசியவர்கள் எல்லாம் காவல்துறையினரால் ஏற்படுகின்ற இடர்பாடுகளைப்பற்றி பேசினார்கள், அதே நேரத்தில் இந்த அலுவலர்களுடைய இடர்பாடுகளை களைய, அவர் களுடைய சங்கடங்களை களைய ஒரு அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று - மனமில்லாமல் அல்ல - நேரமில்லாமல் பேச விட்டுவிட்டார்கள் என்று கருதுகிறேன். 1970ஆம் ஆண்டில் நான் பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவு காலம் வரையில் காவல் துறையில் மான்யக்கோரிக்கை 13 கோடி 66 இலட்சம் ரூபாயாக இருந்தது. அதற்குப் பிறகு ஆண்டுதோறும் இரண்டு கோடி மூன்று கோடி என்கின்ற அளவுக்கு வளர்ச்சி பெற்று 1974-75-ம் ஆண்டில் 26 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து இன்றைக்கு சற்றேறக்குறைய 34 கோடி ரூபாய் அளவுக்கு வந்து நிற்கின்றது. 13 கோடி 66 இலட்சமாக இருந்தது கோரிக்கை மூன்று நான்கு ஆண்டு