பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

காவல்துறை பற்றி

அந்தக் காவலர்கள் பதக்கமும் பணமுடிப்பும் பரிசும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று பெறுவார்கள், அந்த நாளிலே அல்லவா அவைகளை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் அண்ணா பிறந்த நாளில் அல்லவா வழங்க வேண்டும், பாடப் புத்தகங்களிலே அண்ணா அவர்களின் கட்டுரையை எடுத்தவர்கள் அண்ணா பிறந்த நாளிலே இப்படிப்பட்ட சிறப்பான நிகழ்ச்சி நடைபெற எண்ணுவார்களா மனம் இடந்தருமா, இந்த இடம் வராத காரணத்தால் இந்தத் திட்டத்தைக் கைவிட்டார்கள்.

நான் இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன், வருகிற அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 15-ஆம் நாளில் காவலர் களுக்கு வீரப்பதக்கத்தையும், சிறப்புப் பதக்கத்தையும் வழங்குகிற காரியத்தை இடையில் அறுந்துபோன அந்தக் காரியத்தை அண்ணா பிறந்த நாளன்று அரசு நடத்த வேண்டுமென்று காவல் துறைக்கும் அமைச்சராக இருக்கிற முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். மாஜி காவல்துறை அமைச்சன் என்ற முறையிலே, அண்ணா பிறந்த நாள் அந்த நாளிலே இந்தச் சிறப்பு இருக்கக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட காரியம். அதற்குப் பதில் அளிக்கிற வகையில் இது அமைந்திட வேண்டும். இப்படிப் பட்ட சிறப்புப் பதக்கங்கள் உரியவர்களுக்கு தகுதிபடைத்தவர் களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தரப்பட்ட மானியக் கோரிக்கைகளில் சில விவரங்களைப் பார்க்கும்பொழுது ஒன்று எனக்குக் குறைபாடாக இருந்தது 'வெல்பேர் ஆப் போலீஸ் பர்சனேல்' என்பதில் 1975-76 ஆண்டுக் கணக்கின்படி 14.73 இலட்சம் ரூபாய் 'வெல்பேர் ஆப் போலீஸ் பர்சனேல்' என்ற தலைப்பிலே செலவழிக்கப் பட்டிருக்கிறது. 1976-77-இல் 11.83 இலட்சம் என்கின்ற வகையிலே தான், அதாவது 11 இலட்சம் என்ற வகையிலேதான் செலவழிக்கப் பட்டிருக்கிறது. 1977-78 ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டிலே அது 12.69 இலட்சமாகத்தான் இருக்கிறது. ஏன் 'வெல் பேர் ஆப் போலீஸ் பர்சனேல்' என்கின்ற இந்த முக்கியமான ஒன்று 14 இலட்சத்திலிருந்து 12 இலட்சம் என்கின்ற அளவிற்குக் குறைந்து விட்டது என்பது எனக்குப் புரியவில்லை. அதை உயர்த்திக் காவல் துறையினர் நல்வாழ்வுத் திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பதை அரசினுடைய கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.