26
காவல்துறை பற்றி
காட்ட விரும்புகிறேன் - தயவு செய்து யாரும் தாய்மார்கள் “சட்ட சபையிலே தாலாட்டா?” என்று கேட்டுவிடவேண்டாம். அந்த தாலாட்டுப் பாட்டு
ஆராரோ
—
ஆரிரரோ
ஆணழகா! கண்வளராய்!
அஞ்சுபத்து சம்பளத்தில் மிஞ்சுவதில் வளரவந்த அஞ்சுகமே! கண்வளராய்!
போலீசு வேலைக்கென்று போகின்ற ஙொப்பனுக்கு புத்திரனாய் வந்துதித்த தரித்திரமே கண்வளராய். துப்பாக்கி எடுத்துகிட்டு போகின்ற ஙொப்பனிடம் பழம்பாக்கி கேட்டுகிட்டு வழிமறிக்கும் கடன்காரன் வருகின்ற காட்சிகளைக் காணாமல் கண்வளராய். நாடாளும் மந்திரிகள் நலியாமல் வாழ்வதற்கு ஓடாகத் தேய்கின்ற அப்பாவின் புத்திரனே
குருவிக் கூடான வீட்டுக்குள்ளே தவழுகிற குலவிளக்கே! கொசுக்கடிக்கு அஞ்சாமல் குவளை மலர்க் கண்வளராய்! காக்கி உடை போட்டுகிட்டு சேப்பு தொப்பி மாட்டிகிட்டு நாட்டை காக்கும் வீரனுக்கு உன்னைப்போல
நாலு வந்து பிறந்து விட்டால்
காவி உடை வேணுமாடா; கமண்டலமும் தேவையாடா! இதுதான் நான் அதில் எழுதியிருந்த பாட்டு. இந்தக் காரணம் காட்டி அந்தப் பாடல் தடை செய்யப்பட்டு நாடகம் தடை செய்யப்பட்டு விட்டது. நான் இவைகளையெல்லாம் சொல்லும் காரணத்தினால் எதிர்க் கட்சி ஒரேயடியாக போலீஸை ஆதரிக்கிறார்கள்; அப்படி ஆதரித்து அவர்களுடைய அன்பையும், குளிர்ச்சிப் பார்வையையும் பெறப் பார்க்கிறார்கள் என்று சொல்லி விடவேண்டாம். கழனியில் களை இருப்பது போல, நிலவில் களங்கம் இருப்பது போல போலீசாருடைய கடமைகளில் இருக்கின்றன, களங்கம் இருக்கின்றது, மாசு இருக்கின்றது, அத்தனை பேரும் மாசு அற்றவர்கள் என்று கூறமாட்டேன். அப்படி இருக்கும் காரணத்தால்தான் சென்னையில் பல இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய படிப்பகங்கள் காலி செய்யப்படவேண்டுமென்று போலீஸாரால் மிரட்டப் படுகிறது. நேற்றைய தினம்கூட இந்த மாதிரி ஒரு சம்பவம்
-
போலீஸாரிடத்தில்
-
சில
பல
களைகள்