பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

காவல்துறை பற்றி

செய்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு இந்தக் காரியங்களிலே, இன்றுள்ள ஆளுங்கட்சியைப் பிடிக்காத அதிகாரிகளால் இந்த ஆளுங்கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகள் என்று கருதப்படுகின்றன. இந்த வேறுபாட்டைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பரங்கிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த சோழிங்கநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினரும் கழகத்தைச் சேர்ந்தவருமான ஹாத்தீம் பாய் என்பவரை, சூலை 15-ம் நாள் அன்று திருவான் மையூர் காவல் நிலையத்தினர் கைது செய்து, நிர்வாணமாக லாக்கப்பில் அடைத்தார்கள் என்ற புகாரும் எனக்கு எழுதப் பட்டிருக்கிறது.

தென்காசி தாலூகா, ஆலங்குளம் காவல் நிலையத்தில் 31-7-1977 அன்று சங்கரபாண்டியன் என்பவரை, அழைத்துச் சென்று பூட்ஸ் காலால் மிதித்து அடித்து இரத்தம் சொட்ட, சொட்ட அவரைத் துரத்தியிருக்கிறார்கள் என்று அந்தப் பகுதியினுடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயலாளர் தோழர் இராஜாங்கம் என்பவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது அண்மையிலே, 31-7-1977 அன்று நடைபெற்ற கொடுமையாகும்.

மாணவர்கள் பிரச்னை பற்றியெல்லாம் பேசப்பட்டது. மாணவர்கள் பிரச்சனை கழக ஆட்சிக் காலத்திலேதான் நடை பெற்றது என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த 45 நாட்களில், எத்தனை ஒத்திவைப்புத் தீர்மானங்கள் இந்த அவையில் கொண்டு வரப்பட்டன என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை. புதுக்கல்லூரி மூடப்பட்டு, மாணவர்கள் - பொதுமக்கள் அல்லது, பொதுமக்கள் என்கிற பெயர் சூட்டிக்கொண்ட ரௌடிகள், போலீசார் ஆகியவரிடையே நடைபெற்ற மோதுதல் பற்றி நாம் இங்கே விவாதித்திருக்கிறோம். தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கச் சென்ற மாணவர்கள் மீது 26-7-1977 அன்று போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். அதன் தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, நந்தனம் கல்லூரி, தியாகராய கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, புதுக்கல்லூரி ஆகியவைகள் மூடப்பட்டன. அது பற்றியும் நாம் இந்த அவையிலே விவாதித்திருக்கிறோம்.