கலைஞரின் சட்டமன்ற உரைகள்
271
சைதாப்பேட்டை எம். சி. இராஜா விடுதியில் மாணவர்கள் கோரிக்கை விட்டதைத் தொடர்ந்து போலீசார் ஆஸ்டலுக்குள்ளே நுழைந்தார்கள் என்று மாணவர்களைத் தாக்கினார்கள், கண்ணீர்ப் புகை பிரயோகம் வரையிலே நடைபெற்றது என்றும் அது பற்றிய மாணவர்கள் பிரச்சனை குறித்து விவாதித்திருக்கின்றோம்.
சென்னை சட்டக் கல்லூரியிலே உள்ள மாணவர்கள் எம். சி. இராஜா விடுதியில் நடைபெற்ற அந்தக் கொடுமைகளைக் கண்டிக்க, அனுதாபம் தெரிவிக்கக் கூடிய நேரத்தில், அவர் களையும் போலீசார் தாக்கினார்கள் என்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடந்தது என்றும் மாணவர்கள் கைதாகி விடுவிக்கப் பட்டார்கள் என்றும் என்றும் அது பற்றியும் இந்த அவையிலே விவாதித்திருக்கிறோம்.
உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய இடங்களில் பேருந்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மோதுதல் ஏற்பட்ட பிரச்னைகளை இந்த அவையிலே விவாதித்திருக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கைவிலங்கோடு இழுத்துச் செல்லப்பட்டார் என்ற செய்தியும் இங்கே சொல்லப்பட்டது. ஆனால், அதிகாரிகள் கொடுத்த தகவல் அப்படியல்ல என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, மேலும் விசாரிக்கப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு, விசாரிக்கப் போவதாக உறுதி மொழி அளிக்கப்பட்டு, அதுவும் அண்மையிலேதான் என்று குறிப்பிட விரும்புகிறேன்.
போலீசாரால் ஒருவர் அடிக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்ற செய்தியையும் மாண்புமிகு சுப்பு அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.
இராணுவத்திலே பணியாற்றிய முத்துசாமி என்பவர் விடுமுறையிலே மாமனார் வீட்டிற்கு வந்திருந்தபோது, டாக்டர் ஒரு தவறான மருந்து கொடுத்ததால் மன நிலை தடுமாறி போலீசார் அழைத்துச் சென்றபோது, உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட அந்த நிலையிலும் அவரைப் போலீசார் கடுமையாக உதைத்து, மிதித்து, அதற்குப் பிறகு அவர் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாள அட்டையைக் காண்பித்தபிறகு பயந்து கொண்டு விட்டு விட்டார்கள்.