274
காவல்துறை பற்றி
தென்னாற்காடு மாவட்டத்தில் வன்பார் கிராமத்தில் மலை யாளத்தான் என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து இருந்த நண்பர் பிறகு அந்தக் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சேர்ந்த சில நாட்களிலே அவர் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி என்று சொல்லப்பட்ட எதிரி களில் ஒருவர் கீழ்க் கோர்ட்டில் விடுதலையானார். ஒருவர் உயர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் பாலசுந்தரம் கொலையுண்டது பற்றி உருக்கத்தோடு அன்றைக்கு அவை முன்னவர் எடுத்துக் கூறினார். அந்தக் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக நண்பர் மாசிலாமணி ஆயுள் தண்டனை பெற்று இன்றைக்குச் சிறைக் கைதியாக இருக்கிறார் என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மாயவரத்திலே மாணவர் ராமசாமி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தோழர் கொலையுண்டார் என்ற செய்தியை மாண்புமிகு உறுப்பினர் கிட்டப்பா என்னிடத்திலே கூறுகிறார். இவைகளை எல்லாம் சொல்வதற்குக் காரணம் கழகத் தோழர்களும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எத்தனை பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதல்ல. இரு தரப்பிலும் மாறி, மாறி வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்களை கழக அரசு கண்ணியமாக நடந்து கொண்ட காரணத்தினால் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்து அவை முன்னவர் அன்றைக்கு நிதிநிலை அறிக்கையை அளித்துப் பேசும்போது, அவரது அறிக்கையினைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, அதிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். உதயகுமார், கிளைவ் ஹாஸ்டல், இது போல பல சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள். எந்த ஒரு சம்பவத்திலும் கழக அரசு வாளா இருந்து இருக்கவில்லை. ஒவ்வொரு சம்பவம் குறித்தும் இந்த அவையிலே விவாதம் வந்த போது உடனடியாக