கலைஞரின் சட்டமன்ற உரைகள்
275
மாண்புமிகு திரு. கி. மனோகரன் : நான் அந்த இரத்த சாட்சிகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற முறையிலே பெயர்களைச் சொன்னேனே தவிர உங்கள் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன என்று நான் தெரிவிக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்
மு
கலைஞர் மு. கருணாநிதி : அதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதை விளக்க நான் கடமைப்பட்டிருக் கிறேன் என்பதால் விளக்க விரும்புகிறேன். மாண்புமிகு உறுப்பினர்கள் பொதுப்படையாகச் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள்.
கு
அது மட்டுமல்ல, 1971-ம் ஆண்டில் நாமெல்லாம் ஒன்றாக இருந்த காலத்தில்தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா உரை ஆற்ற நான் சென்றேன். அப்போது டாக்டர் பட்டம் எனக்கு அளிப்பதாக அறிவித்தார்கள். அப்போது தான் மாணவர் கிளர்ச்சி நடைபெற்றது. பட்டம் பெற்று வந்த பிறகு என்னைப் பாராட்டும் முகத்தான் இன்றைக்கு முதலமைச்சராக உள்ளவர் அன்றைக்கு என்னைப் பாராட்டிப் பேசியது இன்றைக்கும் எனக்குப் பசுமையாக இருக்கிறது. நான் அவைகளைக் குறிப்பிடுவதற்குக் காரணம் 1971-ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவங்களை எப்படி தேர்தல் நேரத்தில் படமாகப் போட்டு, அந்த மாணவர்கள் மீது நான் துப்பாக்கியை வைத்துக் கொண்டு நடைபோட்டு வருவதாகப் போட்டார்கள். டாக்டர் பட்டம் பெற்று (ஸ்டெதாஸ் கோப் வைத்துக்கொண்டு அல்ல) அந்தப் பட்டத்தோடு மாணவர் களின் பிணத்தின்மீது நான் நடந்து வருவது போல ஒரு படம் போட்டார்கள் . அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சம்பவங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி என். எஸ். ராமசாமி அவர்கள் அப்போதே ஒரு விசாரணை நடத்தினார். உயர்நீதிமன்ற நீதிபதி என். எஸ். ராமசாமி அவர்களைக் கொண்டு ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அவருடைய தலைமையில் அது ஆராயப் பட்டு அவர் தந்த அறிக்கை அவையிலே வைக்கப்பட்டது.
இவைகளை எல்லாம் ஓய்வாக இருக்கிற நேரத்தில் அமைச்சர் பெருமக்கள் படித்துப் பார்க்க வேண்டுமென்று