பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

காவல்துறை பற்றி

கேட்டுக் கொள்கிறேன். அந்த உயர்நீதிமன்ற நீதிபதி என். எஸ். ராமசாமி என்ன தீர்ப்பினை அளித்திருக்கிறார். என்ன படிப்பினையை அளித்திருக்கிறார் என்பதை இங்கே எடுத்துக் காட்டுவது அவசியம் என்ற காரணத்தினால் அதைக்

குறிப்பிடுகிறேன்.

23-7-1971 அன்று காலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பு அனுப்பப் பெற்ற வர்கள் தங்களுடைய வண்டிகளில், மோட்டார் வண்டிகளில் வந்த போது வழி மறிப்பதற்கு நக்சல்பாரி மாணவர்கள் முயற்சித்தார்கள். முதலமைச்சரின் கார் எப்போது வரும் எனக் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்படிக் கவனித்துக் கொண்டிருக்கும்போது, முன்னே சென்ற ஒன்றிரண்டு வண்டிகளில் ஒளிந்து கொண்டு சென்றிருக்கலாம் என்றும், எல்வாறாயினும் விடக்கூடாது என்று அவர்கள் பேசிக் பேசிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனைச் சாட்சிகள் எடுத்துக் கூறியுள்ளார்கள். அந்தச்சாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு சதிக்குற்றம் மெய்ப்பிக்கக்கூடும் என்று அரசு கருதவில்லை. அந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது காவலர்கள் மாணவர்களை அப்புறப்படுத்தியிருக்காவிட்டால் அவர்கள் முதலமைச்சரின் மோட்டார் வண்டியை மறித்து நிறுத்தி சூழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த அளவு அவர்களது நோக்கங்கள் இருந்தன. அந்தச் சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவர்கள் எந்த அளவிற்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடு இருந்தார்கள் என்று புலனாகும்.

இதை வைத்துக்கொண்டு முன்னதாக சதித்திட்டம் தீட்டப் பட்டது என்ற முடிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முதலமைச்சரின் மோட்டார் வண்டியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உள்ளக்கிடக்கை காரணமாக, கசப்பு உணர்ச்சி காரணமாக, ஒரு சில மாணவர்கள் உணர்ச்சி வயப்பட்டு முதலமைச்சரின் வண்டியை நிறுத்தி சூழ்ந்து கொள்ள வேண்டும், அல்லது மறித்து நிறுத்த வேண்டும் என்று அந்தக் காரியத்திலே ஈடுபட்டார்கள்.

“சுருங்கக் கூறின் காலை நிகழ்ச்சியின்போது காவலர்கள் குண்டாந்தடியால் மாணவர்களை அடிக்கவில்லை. மாணவர்கள்