பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

277

சாலையின் போக்குவரத்திற்குத் தடை செய்தார்கள். அதில் மாணவர்கள் உறுதியாக இருந்தார்கள். கல் முதலியவற்றை எறிந்த தால் 11 காவலர்களும், சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவரும் காயமுற்றனர். அதன் பிறகே மாணவர்களை அப்புறப்படுத்து வதற்கு வேண்டிய நடவடிக்கையை காவலர் பயன்படுத்தினர். காவலர் மேற்கொண்ட நடவடிக்கை அதிகமானது எனக்கூற இடமில்லை. இதுதான் முதல் பிரச்னை பற்றிய தீர்ப்பாகும்."

“இரண்டாவது பிரச்னையை எடுத்துக் கொண்டால் நீர்த் தேக்கத்தில் காணப்பட்ட உடல் கே. பி. உதயகுமார் உடையதாகவே இருக்கலாம். ஆனால் காவலர் மேற்கொண்ட கடும் நடவடிக் கையால் அவர் இறக்கவில்லை. 23-7-1970 இரவு நீரில் முழ்கியதின் பேரில் அவர் இறந்திருக்க வேண்டும். முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் சடலம் உதயகுமாரு டையதல்ல என்று அறிக்கை விடுத்ததால், சடலம் உதயகுமாரு டையதுதான் என்ற வகையில் அவருடைய தகப்பனாரிடத்திலும், உறவினரிடத்திலும் வாக்கு மூலங்களைப் பதிவு செய்த அதிகாரி பிறகு முதலமைச்சர் சட்டப் பேரவையில் கூறியதற்கு இணங்க இருக்க வேண்டுமென்று ஆவணங்களை திருத்தி தயாரித்தார் என்று வாதிடப்பட்டது. இது முழுவதும் ஆதாரமற்றதாகும். முதற்கண் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் பிரதி ஒன்று இப்போது என் முன் வைக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் முதலமைச்சர் அந்தச் சடலம் உதயகுமாருடையது அல்ல என்று கூறவே இல்லை என்று தெரிகிறது. சடலத்தின் அடையாளம் குறித்து அதில் உறுதியாக எதுவும் கூறவில்லை. சட்டப் பேரவை உறுப்பினர்களில் சிலர் சடலம் உதயகுமாருடையது என்று கருதும் வகையில் அறிக்கைகள் விடுத்தார்கள் என்பதால் முதலமைச்சர் தனது பதிலில் சடலத்தின் அடையாளம் இனிமேல்தான் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.”

இப்படித்தான் அன்றையதினம் உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி அவர்கள் தான் அளித்த அறிக்கையில் தெரிவித்திருக் கிறார். எந்த நேரத்திலும் இந்த மன்றத்திலே அது உதய குமாருடைய சடலம் அல்ல என்று நான் கூறவேயில்லை. இந்த மன்றத்திலே அப்போது பொன்னப்ப நாடார் போன்றவர்கள் எல்லாம் இருந்தபோது, உதயகுமாரின் புகைப்படத்தினையும்,