கலைஞரின் சட்டமன்ற உரைகள்
27
நடைபெற்றிருக்கிறது. பெரம்பூரில் 'சத்தியவாணிமுத்து படிப்பகம்' என்று ஒரு படிப்பகம் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு படிப்பகம் இருக்கிறது. இந்த இரண்டு படிப்பகங்கள் இருக்கும் இடங்கள் யாருக்கும் சொந்தமானது அல்ல. காங்கிரஸ் படிப்பகத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக சத்தியவாணிமுத்து படிப்பகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டுமென்று போலீஸார் அங்கே சென்று மிரட்டியிருக்கிறார்கள். சத்தியவாணிமுத்து அவர்கள் போலீஸ் கமிஷனரிடத்தில் இதைப் பற்றி முறையிட்டதாக நான் அறிகிறேன். நாகை தாலூகாவில் வேளூர், நீலப்பாடி, சோழங்க நல்லூர், ஓடாச்சேரி, குருமனாங்குடி திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தார், இன்றைய தினம் காமராஜருடைய அரவணைப்பைப் பெற்றிருக்கிறோம் என்ற எண்ணத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தினரை வெறியாட்டம் நடத்தியும், பொருள் வாங்க வந்தவர்களை நையப் புடைத்தும் வருகிறார்கள். இதன் மீது போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற செய்தி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
நானும்,
எனது
அதே போல, சென்னையில் இருக்கிற குடிசைப் பகுதிகளில் போலீஸார் குற்றங்களைக் கண்டுபிடிக்கவேண்டா மென்று கூறவில்லை - குற்றம் செய்யாதவர்களை இழுத்து வருகிறார்கள். கட்சிச் செயலாளர் திரு. மதியழகன் அவர்களும் நேரிலேயே கண்ட ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன். இரண்டு தினங்களுக்கு முன் திடீரென்று நள்ளிரவு 12 மணிக்கு எனது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கக் கூடிய குடிசைகள் பக்கத்திலிருந்து "குய்யோ, முறையோ” என்று சப்தம் வந்தது. வெளியே வந்து என்ன என்று பார்த்தால் போலீஸார் 200 பேர்களை சுற்றி வளைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் அங்கேயிருந்த தாய்மார்கள் என்னுடைய வீடு நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களைப் பார்த்து “என்ன” என்று கேட்டேன். போலீஸ்காரர்கள் கைது செய்கிறார்கள் என்று சொன்னார்கள்
திருமதி டி. என். அனந்தநாயகி : ஆன் எ பாயிண்ட் ஆஃப் இன்ஃபர்மேஷன், கனம் அங்கத்தினர் முதலில்