பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

279

எஸ். ஜி. கிருஷ்ணன், இப்போது தி. மு. க.-வில் இல்லை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார். அவரை விசாரித்தால் தெரியும்.

கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் பற்றி, நீதிபதி குப்பண்ணன் என்ன சொன்னார். "கிளைவ் விடுதிக்குள் காவலர்கள் நுழைந்தார்கள் என்று தெரிந்த பின்னரும், மாவட்ட ஆட்சித் தலைவரும், டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலும் கிளைவ் விடுதிக்கு செல்லத் தவறியது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று நீதிபதி மாவட்ட ஆட்சித் தலைவரைப் பற்றிச் சொன்னார். யார் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர், இங்கே பெயர்களையெல்லாம் சொல்லலாம் என்று எல்லா அதிகாரிகள் பெயரும் காலையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு முன்பு நம்முடைய கந்தசாமி அவர்கள் 4-5 அதிகாரிகளுடைய பெயர்களை எல்லாம், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருடைய பெயரை எல்லாம் குறிப்பிட்டார். அந்த அடிப்படையில், இந்த கிளைவ் விடுதி சம்பவத்தில் நீதிபதியால் கூறப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், யார்?

அன்றைக்கு இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் யார்? பாரதி. ஐ. ஏ. எஸ். இப்போது அறிக்கை தயாரித்திருக்கிறாரே கூட்டுறவு மோசடிகள் பற்றியெல்லாம், அவர்தான். அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அன்றைக்கு நீதிபதியால் சொல்லப்பட்டு அதற்குப் பிறகு மாற்றப்பட்டவர். ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டு மானால் மாநில அரசு செய்யமுடியாது என்று கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் அந்தக் காரியத்தை விட்டு மத்திய அரசைக் கலந்து கொண்டு அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்குமாறு அப்போது இருந்த கழக அரசு பணித்து அது இந்த அவையிலும் எடுத்துச் சொல்லப்பட்டது என்பதை நான் உங்களுக்கு இங்கே ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

இறுதியாக லூர்துநாதன் பற்றியது. லூர்துநாதன் விவகாரத்தில் உடனடியாக இங்கு இந்த அவையில் உள்ள உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பியபோது உடனடியாக விசாரணைக் கமிஷன் அதற்குப் போடப்பட்டது. அதில் கோதண்டராம ராஜு, பி. ஏ., பி. எல்., மாவட்ட செஷன்ஸ்