பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

காவல்துறை பற்றி

முதன்மை நீதிபதி அவர்களைத் தலைவராகக் கொண்டு அதனை விசாரித்தார்கள். அப்படி விசாரித்தஅதிலே இரண்டு தீர்ப்புக்களை கூறினார்கள். ப்ரொபஸர் சீனிவாசன் அவர்களுக்கும் அவர்களது சகோதரர்களுக்கும் அங்கிருந்த காவல் துறையினர் விளைவித்த கொடுமை பயங்கரமானது, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அந்தத் தீர்ப்பின்படி அவர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெறும்போது இதிலேயுள்ள அதிகாரி - ராஜசேகரன் என்று நினைக்கிறேன் - அவர் மாரடைப்பினால் இறந்துபோய் விட்டார்கள். மற்ற அதிகாரிகளுக்கு மூன்று மாத காலம், நான் கு மாத காலம் என்று அவர்களுக்கெல்லாம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர்களை விட்டுவிடவில்லை.

லூர்துநாதன் வழக்கு பற்றிய தீர்ப்பை வழங்கிய அதே நீதிபதி அடுத்த பக்கத்தில் சொல்லுகிறார். லூர்துநாதன் இறந்ததற்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்க மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். சில மாணவப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித் தலைவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். மாணவர்கள் சிலர் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது நாகர்கோவிலிலிருந்து வந்த பஸ்ஸை வழிமறித்து சில விஷமிகள் கல்லெறிந்து சேதப்படுத்தி அதன் டயர் களிலிருந்து காற்றை நீக்கினர். பஸ் டயர்கள் அகற்றப்பட்டன. பஸ்ஸைக் காப்பாற்ற, பஸ்ஸில் உள்ள பயணிகளைக் காப்பாற்ற காவல்துறையினர் ஓடி வந்தனர். அதைக்கண்டு மாணவர்கள் சிதறி ஓடினர். அப்படி ஓடும்போது லூர்துநாதன் ஆற்றைக்கடந்து ஓடுகிற நேரத்தில் அந்த இடத்தில் சுற்றிசுழன்றுகொண்டிருந்த சுழலில் மாணவன் லூர்துநாதன்

நீதிபதி அவர்களின் வார்த்தையில் சொல்லவேண்டு மானால் - தீவினைப் பயனால் மாட்டிக்கொண்டு மூழ்கிப்போனான். மூழ்கும்போது ஆற்றிலிருந்த கரடுமுரடான கற்கள், வழவழப்பான கற்கள் ஆகியவற்றுடன் முட்டிமோதியதில் அம் மாணவனுக்கு மூன்று காயங்கள் ஏற்பட்டன. மூழ்கியதால் மூச்சுத்திணறி அம் மாணவன் இறந்தான். அம் மாணவனது மரணத்திற்கு காவலர்கள் பொறுப்பாளிகள் அல்ல, என்று அந்த நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். முதலில் தீர்ப்பளித்த அதே நீதிபதிதான், காவலர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும்