பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

283

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : இது சம்பந்தமாக என்னையும் விசாரணை செய்தார்கள். அதை நான் இல்லை என்று மறுத்திருக்கிறேன். வீரபாண்டி ஆறுமுகம் இதை மறுத்துள்ளார் என்பதை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : நான் அமைச்சர் அவர்களுக்குக் களங்கம் கற்பிக்கவேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சியில் எப்படியெல்லாம் அதிகாரிகள் சாட்சிகளை வேண்டுமென்றே தயாரித்து

இருக்கிறார்கள் என்பதை .

திரு. துரை. முத்துச்சாமி : துணைத் தலைவர் அவர்களே, பாயின்ட் ஆப் ஆர்டர். குடியரசுத் தலைவர் ஆட்சியில் கூட சில தவறுகள் நடந்திருக்கின்றன என்று சொல்லுகிறார்கள். அப்படி யென்றால் குடியரசுத் தலைவர் அதற்குப் பொறுப்பாளியாக முடியுமா?

கலைஞர் மு. கருணாநிதி : அப்பொழுதிருந்த குடியரசுத் தலைவர் மறைந்து விட்டார். குடியரசுத் தலைவர் ஆட்சி என்று நான் குறிப்பிடுவது அந்த காலகட்டத்தைத்தான் குறிப்பிடுகிறேன். அந்த காலக்கட்டத்தில் எப்படியெல்லாம் சாட்சிகள்

ஜோடிக்கப்பட்டார்கள் தயாரிக்கப்பட்டார்கள் என்பதை சொல்வதற்காகத்தான் இதைக் குறிப்பிட்டேனே தவிர வேறு எதுவும் இல்லை. எப்படியெல்லாம் வழக்குகள் அன்றையதினம் அதிகாரிகளால் ஜோடிக்கப்பட்டன என்பதற்காகச் சொன்னேனே அல்லாமல் எனது அன்பிற்குரிய நண்பர் அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்ல வில்லை.

இது ஒன்றே போதும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல குடியரசுத் தலைவர் ஆட்சியில் யார் யார் லஞ்சம் வாங்கினார்கள் என்று எல்லாம் சொல்லப்பட்ட செய்திகள். அதைத் தொடர்ந்து அதற்காக ஜோடிக்கப்பட்ட வழக்குகள் இவையெல்லாம் எப்படிப்பட்டவை என்பதை பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தந்த விளக்கத்திலிருந்து அனைவரும் புரிந்து கொள்ளலாம், என்பதை

அமைச்சர்