286
காவல்துறை பற்றி
இன்றைக்கு ரூ. 33 கோடி அளவுக்கு மானியம், எழுப்பப்படுகிறது. இந்தத் துறை 1970ஆம் ஆண்டில் ரூ. 13 கோடி அளவுக்குத் தான் மானியம் எழுப்பப்படுகின்ற ஒரு துறையாக இருந்தது. இந்த ரூ. 13 கோடி 1974-75ஆம் ஆண்டிலேயே ரூ. 26 கோடி அளவிற்கு இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்ததற்குக் காரணம் போலீஸ் கமிஷனுடைய பரிந்துரைகளை அன்றைக்கிருந்த அரசு நிறைவேற்றத் தொடங்கியதுதான்.
அதுமாத்திரமல்ல, இரண்டாம் நிலைக் காவலர்கள், ரூ. 70-லிருந்து ரூ. 95 வரையில் அடிப்படைச் சம்பளம் பெற்றவர்களுக்கு ரூ. 150-லிருந்து, ரூ. 225 என்ற அளவிற்கு அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தியது அந்தப் போலீஸ் கமிஷனுடைய பரிந்துரைகளுடைய அடிப்படையிலேதான் என்பதையும் நாம் யாரும் மறந்துவிடுவதற்கில்லை. கடந்த காலத்திலே, இந்தத் துறை வேகமாக இயங்கவும், விரைவாகப் பணியாற்றவும், விறுவிறுப்போடு செயல்களை முடுக்கவும், நவீனக் கருவிகள் தேவை என்பதை உணர்ந்து கமிஷனுடைய பரிந்துரைகளில் அதுவும் ஒரு கட்டமாக இருப்பதை அறிந்து அதற்கு ஆவன செய்ததும் முன்பிருந்த கழக அரசு என்பதையும் அது தொடர்ந்து நடைபெறும் என்கின்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
காவல் துறை அதிகாரிகள் அல்லது காவல் நிலையங்களில் இருப்பவர்கள் உடனடியாகச் சென்று குறிப்பிடுகின்ற புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு ஏதுவாக 1971ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரையில் இந்த 4 ஆண்டு காலத்தில் 450 மோட்டார் சைக்கிள்கள் அந்த காவல் நிலையங்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எல்லாம் ம் நான் சொல்வதற்குக் காரணம் காவல் துறையில் இருக்கிற பெரும்பாலோர் அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பல தவறுகளைச் செய்கிறார்கள் என்றாலும்கூட அந்தத் தவறுகளை இப்படிப்பட்ட மன்றங்களில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களும் இன்னும் சொல்லப்போனால் ஆளும் கட்சி வரிசையில் உள்ளவர்களும் இந்த மானிய விவாதத்தின்போது சுட்டிக்காட்டுகின்ற காரணத்தால் அவர்கள் அவர்களைத் திருத்திக்கொள்ளவோ, திருத்திக்கொள்ளத் தயாராக இல்லா