பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

287

விட்டால் அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கவோ ஏதுவாக இருக்கும் என்பதால் விவாதிக்கிறோமே அல்லாமல் அதே நேரத்தில் இந்தத் துறை மேலும் செம்மைப்படுத்தப்பட்டு, விறுவிறுப்பாக, வேகமாகப் பணியாற்றுவதற்கான வழிவகை செய்யப்பட வேண்டும்; அதற்கு இந்த அரசு ஆவனச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே சுட்டிக்காட்டுகிறேன்.

தரப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையை நான் கூர்ந்து படித்துப் பார்த்தேன். ஆய்வு அறிக்கையிலே 4, 5 பக்கங்களில் 1976, 1977 ஆம் ஆண்டுகளில் சொத்து குறித்து நிகழ்ந்த குற்றங்கள் பற்றிய ஒப்பீட்டு அறிக்கை பின்வருமாறு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது அவைகளில் 1976 ஆம் ஆண்டு ஆதாயத்திற்காக செய்யப்பட்ட கொலைகள் 30. 1977 ஆம் ஆண்டில் அது 49. கொலைகள் உயர்ந்திருக்கின்றன.

1976 ஆம் ஆண்டில் கொள்ளைகள் 20. 1977 ஆம் ஆண்டில் 22 ஆக உயர்ந்திருக்கிறது.

வழிப்பறி 120, 1976-ல். 1977-ல் 130 ஆக உயர்ந்திருக்கிறது. கன்னக்கோல் வைத்துக் கொள்ளையிடுதல் 1976-ல் 7,759 ஆக இருக்க, 1977-ல் 10,305 ஆக உயர்ந்திருக்கிறது.

கஉ

பெரிய திருட்டுகள் 19,710, 1976-ல். 1977-ல் 24,589 ஆக உயர்ந்திருக்கிறது.

சிறிய திருட்டுகள் 2,551, 1976-ல். 1977-ல் 3,244 ஆக உயர்ந்திருக்கிறது.

கால்நடைத் திருட்டுகள் 1976-ல் 1,187. 1977-ல் 1,359,

ஆக 1976-ல் 31,377 குற்றங்கள். 1977-லே 39,698 குற்றங்கள், இந்த அளவுக்கு ஏறத்தாழ 8,000-க்கு மேற்பட்ட நிலையில் குற்றங்கள் அதிகரித்து இருக்கின்றன.

இந்த ஒப்பீட்டு நோக்கில் 1975-லே ஆண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், 1975-ல் நடைபெற்ற குற்றங்கள் 33,044. இப்போது 1977-ல் 39,698. 1975 ஆம் ஆண்டுக்கும் 1977 ஆம் ஆண்டுக்கும் இடையில் 6,000-க்கு மேற்பட்டு குற்றங்கள் அதிகரித்து இருக்கின்றன என்பதை இந்த அவையில் அரசின் சார்பில் தரப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை நிதர்சனமாகத் தெரிவித்திருக்கிறது.