பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

289

நான் 1972-ம் ஆண்டு புள்ளிவிவரத்தைச் சொன்னேன். 1972ஆம் ஆண்டிலே குற்றங்களின் அதிகரிப்பு 3.1 சதவீதமாக இருந்தது. 1977 ஆம் ஆண்டிலே குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 26.5 சதவீதமாகி இருக்கிறது, இதற்குக் காரணங்கள் கொடுத்திருக்கிறார்கள். பெருமளவில் புலன் விசாரணை அதிகாரிகளை நியமிப்பதன் மூலம்தான் இந்தச் சவாலை ஏற்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே அளவு எண்ணிக்கை உள்ள அதிகாரிகள்தான் 1972-லும் இருந்தார்கள். 1975-லும் இருந்தார்கள், 1976லும் இருந்தார்கள். 1977-லும் இருந்திருக்கிறார்கள் ஆகவே, புலன் விசாரணை அதிகாரிகளைப் பெருமளவில் நியமிப்பதன் மூலமாகத்தான் இந்தச் சவாலை ஏற்க முடியும் என்று கூறுவதை என்னால் ஏற்க இயலவில்லை. இது அதிகாரிகளினுடைய திறமைக்குறைவா ? அல்லது அந்த அதிகாரிகளின் நல்ல திறமையைப் பயன்படுத்த அரசு தவறிவிட்டதா என்கின்ற வினாவோடு இந்தப் பிரச்சினையை நான் நிறுத்த விரும்புகிறேன்.

அடுத்து காவல்துறையினரின் மொத்த எண்ணிக்கை பற்றி ஆய்வறிக்கையின் 23ஆம் பக்கத்தில் தரப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள அதாவது கிட்டத்தட்ட 1978-ஐ ஒட்டி என்று எடுத்துக்கொள்ளலாம் - மொத்த எண்ணிக்கை 46,716 ஆகும். இது 1977-ல் இப்போது தரப்பட்டுள்ள இந்த மானியக் கோரிக்கையின் ஆய்வு அறிக்கையிலே 46,716 பேர் காவல்துறையினரின் மொத்த எண்ணிக்கை என்று கூறப்பட்டிருக்கிறது. 1975ஆம் ஆண்டிலே எவ்வளவு பேர்கள் இருந்தார்கள் ? 46,516 பேர் இந்தக் காவல் துறையினுடைய எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள்.

ஆக 1975-க்குப் பிறகு 1976 உருண்டு 1978-லே 200 பேர்தான் அதிகமாகி இருக்கிறார்கள்.

நம்முடைய மாண்புமிகு முதலமைச்சரவர்கள் பத்தாயிரம் பேரை போலீஸ் வேலைக்குச் சேர்க்கப்போகிறேன் என்று கடந்த கூட்டத்தொடரில் அறிவித்தார்கள். அந்தப் பத்தாயிரம் பேரில் 5 ஆயிரம் பேர், இன்னும் சொல்லப்போனால் ஆயிரம் பேர் கூடச் சேர்க்கப்படவில்லை. 200 பேர்தான் இந்தத் தொகையில் அதிகமாகி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இரண்டாம் நிலைக்