பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

291

1977 ஆகஸ்டு 23-ம் தேதி தரப்பட்ட அறிக்கையில் 873 காவல் நிலையங்களில் 708 காவல்நிலையங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைமையிடத்துடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது தரப்பட்டுள்ள அறிக்கையிலும் எழுத்து பிசகாமல் 873 காவல்நிலையங்களில் 708 காவல்நிலையங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைமை யிடத்துடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளன என்றுதான் இப்போதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

எனவே இந்தத் துறையைப் பொறுத்தவரையில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. பெரிய முன்னேற்றம் என்றால் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித்தரவும் இதில் எளிதாகவும், வேகமாகவும் வழிகளைப் பின்பற்ற இந்தத் துறை பலப்படுத்தப்படவேண்டும், புதுமைப்படுத்தப்படவேண்டும் என்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தொடரவில்லை என்பதுதான் கடந்த கால இந்த அரசு வைத்த ஆய்வுரைக்கும் இப்போது இந்த அரசு வைத்திருக்கும் ஆய்வுரைக்கும் இடையே நாம் ஆய்ந்து பார்க்கிற நேரத்தில் இருக்கிற உண்மையாக இருக்கிறது.

இந்த மன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பேசிய நேரத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டேன். குடித்துவிட்டு வன்முறைகளில் ஈடுபடுகிறவர்கள், வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் இருந்தால் அவர்கள்மீது வழக்குகளைப் போட வேண்டும் என்றும் மற்றும் அதைத் தவிர்த்து மற்ற குடித்த வழக்குகளை வாபஸ் வாங்கிவிட வேண்டும் என்றும் ஒரு அறிக்கை, கவர்மென்ட் ஜி. ஓ. அனுப்பப்பட் டிருக்கிறது என்று நான் படித்தேன். அதற்கு முதல்வர் அவர்கள், இது அதிகாரிகளால் அனுப்பப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.

பிறகு ஹோம் டிப்பார்ட்மென்ட், உள்துறை இலாக்காவில் இருந்து இது அனுப்பப்பட்டிருக்கிறது என்று என்று நான் எடுத்துக்காட்டினேன். இவ்வளவு பெரியதொரு கொள்கை விஷயத்தை முதல் அமைச்சர் அவர்களுடைய கையெழுத்தைப் பெறாமல் எப்படி அனுப்பினார்கள் என்று கேட்டேன். அதை