பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

காவல்துறை பற்றி

பார்த்து விசாரித்து அப்போதே அறிவிப்பதாகச் சொன்னார்கள். இதுவரையில் அறிவிக்கவில்லை. இன்று அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன். அந்தத் தவறுக்கு யார் காரணம், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப்பற்றி அவர்களுடைய பதிலுரையில் எடுத்துச்சொல்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்த ஆய்வுரையில் ஆட்சேபகரமான ஒரு பகுதிபற்றி நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. 9, 10 பக்கங்களில், ஒரு குறிப்பு “30-10-77 அன்று கட்டுக்கடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் அடங்கிய கும்பலொன்று, தடை உத்தரவுகளை மீறி கிண்டி அண்ணாசாலையில் ஹால்டா சந்திப்புக்கு அருகில் கூடியது. அக்கும்பல் அவ்வாறு கூடியிருப்பது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டு கலைந்துபோகுமாறு எச்சரிக்கப்பட்டது. அக்கும்பல் கலைந்துபோவதற்குப் பதிலாக கற்கள், சோடா புட்டிகள், கொடிக்கம்புகள், தடிகள் ஆகியவற்றைக் கொண்டு காவல்படையினரைத் தாக்கியது, முறையாக எச்சரிக்கப்பட்ட பிறகு, கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டது. ஆனால், அது பயனளிக்கவில்லை. இது பயனளிக்காமல் போனதனாலும், கும்பல் ஆவேசமடைந்திருந்ததாலும், காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று. இதில் இருவர் இறந்தனர்; இருவர் காயமுற்றனர். காவல் படையினரில் அறுபத்தைந்து பேர் காயமுற்றனர். விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்துள்ளது; அதன் தீர்ப்பு எதிர்ப்பார்க்கப்படுகிறது

அரசு

இவ்வளவு தெளிவாக நீங்கள் தீர்ப்பை அறிவித்துவிட்ட பிறகு கமிஷன் எதற்காக, எதற்கு அவர்களிடம் தீர்ப்பு எதிர்ப்பார்க்கப் படவேண்டும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. காவல் படையினரை அந்தக் கும்பல் தாக்கியது. முறையாக எச்சரிக்கப் பட்டபிறகு கண்ணீர்புகை பிரயோகிக்கப்பட்டது; ஆனால் அது பயனளிக்கவில்லை, அது பயனளிக்காமல் போனதாலும் கும்பல் ஆவேசமடைந்திருந்ததாலும் காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டியதாயிற்று என்று துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் கற்பித்து இந்த அரசு இந்த அவையில் வைத்துள்ள ஆய்வு அறிக்கையில் கூறிவிட்ட பிறகு சோமசுந்தரம் கமிஷன் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. எதிர்பார்ப்பதுபோல்தான் வரும் என்று எண்ண வேண்டிய