பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

295

— -

குறிப்பிட்டுப் பேசினார்கள். இதைக் கேட்டுக்கொள்வதற்கோ அல்லது அதைப்பற்றிப் பேசுவதற்கோ கொஞ்சமும் நான் கூச்சப்படவில்லை, நமது முதலமைச்சர் அவர்கள் கூட ஜனாதிபதி அவர்களிடம் கொடுத்த புகாரில்கூட மைலாப்பூர் சுந்தரம் என்பவர் என்னோடு நெருங்கிய தொடர்பு உடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள், ஆனால் நான் கேள்விப்பட்டதை இதற்கு முதலாவது பொறுப்பு ஏற்றுக்கொண்டவர், சர்க்காரியா கமிஷன் முன்னால் வந்தபோது, சேலம் வக்கீல் சொன்னார், அவர் சொல்லக் கேட்டுத்தான் இதைச் சொன்னேன் என்று கமிஷன் முன்னால் சொன்னார்கள். ஆனால் நான் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த மைலாப்பூர் சுந்தரம் என்பவரை நான் சொல்வதை நம்பவேண்டும் - நான் இதுவரை பார்த்ததுகூட கிடையாது. மைலாப்பூர் சுந்தரம் என்பவர், கழக ஆட்சியால் 156 பேர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நேரத்தில் இந்த 156 பேர்களில் ஒருவர். அதற்கு முன்பு இவரது சாராய கிடங்கில் சாராய பானைகள் இருந்தது ஆணையாளரால் கமிஷனரால் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். நெருக்கடி காலத்தில் 156 பேர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் என்ற முறையில் கைது செய்யப்பட்டார்கள். போலீசார் இடத்தில் அப்படிப்பட்ட பட்டியலில் இருந்து அந்த பட்டியலின்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் ஏழெட்டு பேர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். இப்படிக் கைது செய்யப்பட்ட 156 பேர்களில் இந்த மைலாப்பூர் சுந்தரம் என்பவரும் ஒருவர் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன், அதே நேரத்தில், நாயர், தாமஸ் என்ற இரண்டு பேர்கள் சிக்கிக்கொண்டார்கள் என்பதற்காக அன்றைக்கு மத்திய அரசில் இருந்த பிரமானந்த ரெட்டியார் அவர்களிடம் சென்று, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரினார்கள்.

சில

பிறகு பிருமானந்த ரெட்டி அவர்களை நான் டெல்லியிலே சந்தித்தபோது, 'சாராய வியாபாரிகளைக்கூட மிசாவின் அடிப்படையிலே நீங்கள் சிறையில் போடுகிறீர்களா' என்று கேட்டார்கள்.