பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

29

உரை : 2

நாள் : 18.03.1964

கலைஞர் மு. கருணாநிதி : சட்டமன்றத் தலைவர் அவர்களே, போலீஸ் அமைச்சர் அவர்களால் இந்த மன்றத்தில் மானியம் கோரப்பட்டு எங்கள் கட்சி நண்பர்களால் அளிக்கப்பட்டுள்ள வெட்டுப் பிரேரணையை ஆதரித்துச் சில கருத்துக்களைக் கூறிக் கொள்வதற்கு விரும்புகிறேன். இந்த மானியத்தைப் பொறுத்த வரையில் காலையிலிருந்து விவாதம் சிறிது சிறிதாகச் சூடேறி, தங்களுடைய குறுக்கீடுகளால் அந்த சூட்டோடு சுவையும் ஏறி, விவாதம் ஏறத்தாழ இறுதிக் கட்டத்திலே வந்து நின்று கொண்டிருக்கிறது.

மாண்புமிகு சபாநாயகர் : இந்த நேரத்தில் கொஞ்சம் சூடு குறைந்திருக்கிறது.

கலைஞர் மு. கருணாநிதி : எங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசுகின்ற நேரத்தில் போலீஸ் அமைச்சர் அவர்கள் குறுக்கிட்டு, போலீஸ் இலாகாவைப் பற்றித் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ளேயே முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். அதைப் பற்றி அவர்கள் அவர்களுடைய பேருரையிலே விளக்குவதற்கு முன்னதாக, இந்தக் கருத்துக்களும் பயன்படும் என்பதற்காக அந்த விளக்கத்திற்கு ஏதுவாக அது பற்றி நான் கூற விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை போலீஸ் இலாகாமீது தனிப்பட்ட எந்தவிதமான வெறுப்புணர்ச்சியும், என்றைக்கும் இருந்தது கிடையாது. போலீஸ் இலாகாவின் அரும்பெரும் செயல்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறது; அதே நேரத்தில் போலீஸ் இலாகா தவறான வழிகளிலே செல்லுகின்ற நேரத்தில் சுட்டிக்காட்டுகின்ற அந்தச் செயலையும் புரிந்துகொண்டிருக்கிறது. இதே மன்றத்திலே 1962-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் என்று கருதுகிறேன் போலீஸ் மானியத்தில் நடைபெற்ற விவாதத்தில்

-