பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

காவல்துறை பற்றி

இருக்கும் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட் டிருக்கிறேன்.

பல்வேறு பிரச்சினைகளைப்பற்றியும் நம்முடைய எதிர்க்கட்சியில் பல நண்பர்களும், தலைவர்களும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கு, அமைதி இவைகளைக் காப்பாற்ற காவல் துறையினர் இருக்கிறார்கள். நண்பர் சுப்பு அவர்கள் எடுத்துக்காட்டியதுபோல் ஆளும் கட்சி போலீசாருடைய நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்க முயல்வதும், எதிர்க்கட்சி குறைகளைச் சொல்வதும் மாறி மாறி வருகிற இயல்புகள்; நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கிற நேரத்தில் அப்படிப்பட்ட அதிகாரிகளுடைய கூற்றுக்களைக் கேட்டு அவர்களுக்காக நியாயங்களைக் கற்பிக்க முயன்றிருக்கலாம். அது தவறாக இருக்குமானால் இதே அவையில் பல நேரங்களில் அந்தத் தவறுகள் எங்களுடைய ஆட்சியில் திருத்திக்கொள்ளப்பட்டு, பிறகு விசாரணைக் கமிஷன்கள் போடப்பட்டிருக்கின்றன.

எதற்கெடுத்தாலும் கிளைவ் ஹாஸ்டல், உதயகுமார் என்று திருப்பித் திருப்பிப் பேசிக்கொண்டிருப்பதும், மதுரையில் மாணவர்களைப் போய் கருணாநிதி பார்த்தார் மாணவர்களைத் தூண்டிவிடச் சென்றார் என்று சொல்வதும் எவ்வளவு பொருத்தமுடையது ? அன்றைக்கு கிளைவ் ஹாஸ்டலில் போய் இன்றைய முதலமைச்சர் அவர்களோ, நிதியமைச்சர் அவர்களோ சென்று பார்த்திருந்தால் தூண்டிவிடச் சென்றார்கள் என்று சொல்வது பொருந்துமா ? அதுவும் பொருந்தாது, இதுவும் பொருந்தாது, இது பொருந்தாது என்றால் அதுவும் பொருந்தாது.

ஏற்படுகிற குறைபாடுகளை எதிர்க்கட்சியிடத்தில்தான் சொல்வார்கள். நிதியமைச்சர் அவர்கள் அன்றைக்குச் சொன்னார்கள் - தமிழ் நாட்டில் எந்த மூலை முடுக்கிலும், இண்டு இடுக்கிலும் எது நடந்தாலும் எதிர்க்கட்சித் தலைவருக்குத்தான் முதல் தகவல் கிடைக்கிறது. இது எப்படி ? என்றார். நல்லவேளை அந்தத் தவறை இந்தத் தடவை செய்யாமல் எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

நெல்லை ஜெபமணி அவர்கள் செங்கத்தில் நடைபெற்ற சம்பவத்தைப்பற்றி சொன்னார்கள். ஒரு அரிசன் வீடு செங்கம்