பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

303

வேலையில்லாமல் இருக்கும் வேலையில்லாத பட்டதாரிகள், படித்த இளைஞர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் ஊர்வலத்திற்கு கடல் அலையென, கொடி இல்லாமல் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்பன், எ. கருப்பசாமி.' இப்படிக் கடிதம் எழுதுகிறார்

நான் கேட்கிறேன். இது திட்டமிட்டு என். ஜி. ஓ. க்களை அடக்குவதற்காக செய்யப்பட்ட காரியமா அல்லவா ? இதை மறுத்தால் இந்த வேலையில்லாப் பிரச்னை என். ஜி. ஓ. க்கள் வேலைக்கு போனதுமே முடிவடைந்துவிட்டதா ? என். ஜி. ஓ. க்கள் வேலைக்குப் போகாமல் இருந்திருந்தால் அந்தப் பிரச்னை முடிவடைந்திருக்கும், என். ஜி. ஓ.க்கள் வேலைக்குப் போய்விட்டார்கள். வேலையில்லாதவர்கள் பிரச்னை உடனடியாக அடங்கிவிட்டதா ? அதற்குப் பிறகும் நாங்கள் வேலையில்லாமல் தவிக்கிறோம். எங்களுக்கு வேலை கொடு என்று கோரி ஊர்வலத்தை நடத்தியிருப்பார்களானால் உள்ளபடியே வேலையில்லாத பட்டதாரிகள்தான் ஊர்வலத்தை நடத்தினார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் வேலையில்லாதவர்கள் என்ற பெயரால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக கொடி உயர்த்துவதும் கொடி தூக்குவதும் நல்லதல்ல.

நடந்தது நடந்துவிட்டது. இனிமேலாவது நடக்காமல் இருப்பதற்காகத்தான் நான் முதலமைச்சரைக் கேட்டுக்கொள் கிறேன். அவர் சொல்லி அவருடைய கட்சியைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர் என்ற காரணத்தால் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டத்தை எல்லா மக்களும் எடுத்துக் கொள்கிற சூழ்நிலையை நாம் உருவாக்கிவிடக்கூடாது. சட்டம், ஒழுங்கு அமைதியைப் பாதுகாக்கின்ற அந்தக் கடமையை காவல் துறையினர்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படிச் சொல்லுகிற நேரத்தில் காவல் துறையினர் தங்கள் இஷ்டத்திற்கு அதை எடுத்துக்கொள்ளலாமா என்றால் வள்ளுவர் அழகாகச் சொல்லியிருக்கிறார் 'கடிதோச்சி கடிதோச்சி மெல்ல எறிக' என்று குறிப்பிட்டிருக்கிறார்.