306
காவல்துறை பற்றி
என்ற அளவிலேதான் உயர்ந்திருக்கின்றது. அதிலேகூட ஃபர்ஸ்ட் கிரேட் காவலர்கள் 765 பேர் என்ற அளவுக்கும் செக்கெண்ட் கிரேட் காவலர்கள் 582 பேர் என்ற அளவுக்கும் உயர்ந்திருப்பதை நான் குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் நம்முடைய முதலமைச்சரவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 10,000 காவலர்களைப் புதிதாக நியமிக்கப்போகிறேன் என்று அறிவித்தார்கள். ஆனால் ஆண்டுகள் 3 உருண்டோடிவிட்ட பிறகும் 1,347 பேர்கள்தான் அதிகப்படியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலேயும் செகண்ட் கிரேட் காவலர்கள் 582 பேர்கள்தான் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். அறிவிக்கப்பட்ட 10,000 எங்கே அளிக்கப்பட்ட நியமனங்களின் எண்ணிக்கையான 582 எங்கே என்பதை நான் நினைவுபடுத்துவதில் தவறில்லை.
ஆனால் ஒன்று, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் இப்படி 10,000 பேர்கள் என்றும், 15,000 பேர்கள் என்றும் அறிவிக்காமலேயே ஏறத்தாழ 8,000 காவலர்கள் புதிதாக நியமனம் செய்யப்பெற்றார்கள் என்ற தகவலை இந்த மாமன்றத்திலே நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அளிக்கப்பட்டுள்ள ஆய்வு உரையின் 12ஆம் பக்கத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்டு அளிக்கப்பட்டுள்ள ஆய்வு உரையில் 'குற்றங்களைத் துப்புத் துலக்குதல்' என்ற தலைப்பில் "குற்றப் பிரச்சினையைச் சீரிய முறையிலும் திறமையாகவும் சமாளிப்பதற்கு தமிழ்நாடு காவல் துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. தீர்த்துவைப்பது மிகக் கடினம் என்று வெளிப்படையாகத் தெரியவருகின்ற வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன. 1978இல் தண்டனையில் முடிந்த வழக்குகள், விசாரணை முடிவடையாத வழக்குகளின் சதவீதம் 47.2 ஆக இருக்க, 1979ஆம் ஆண்டு இது 47.6 சதவீதமாக சற்று உயர்ந்து 1980ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31ஆம் நாள் வரை 40 சதவீதமாக உள்ளது." என்று குறிப்பிடப் பெற்றிருக்கிறது.
இதில் 1978-வது ஆண்டையும் 79-வது ஆண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழ் நாட்டிலேதான் சற்று இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலே உள்ள விகிதாசாரங்கள் உயர்ந்திருக்கிறது என்பதையும் இந்த இரண்டு ஆண்டுகளையும்