பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

காவல்துறை பற்றி

தமிழுக்கு மாறும்போது விழுங்கிவிடலாமா, இது முறைதானா என்று நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் அதிகாரிகளைப் பார்த்து கேட்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆயிரம் வழக்குகள் வித்தியாசம் ஆங்கில ஆய்வுரைக்கும் தமிழ் ஆய்வுரைக்கும் இடையே, எப்படி வந்தது என்பதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க இயலாது. எனவே இப்படிப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டாக வேண்டும் என்று எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஆய்வுரையில் இருப்பதைச் சொல்கிறேனே தவிர நானாக இங்கே கொகுத்துச் சொல்வதல்ல. ஆய்வுரையில் வைக்கப்பட்டிருக்கிற புள்ளி விவரங்கள் குறித்து நான் எல்லாவற்றையும் இங்கே சொல்வதற்கு நேரம் இல்லாவிட்டாலும் சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த 1979-80ஆம் ஆண்டு மாத்திரம் எவ்வளவு வகுப்புக் கலவரங்கள் அல்லது ஆய்வுரையில் குறிப்பிட்டிருப்பது போல் இனக் கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன என்றால் நீலகிரி மாவட்டத்தில் 5-1-1979இல் படகர்களுக்கும் படகர்கள் அல்லாத வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் மூன்று படகர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 45 படகர்களும், 22 படகர்கள் அல்லாதவர்களும் படுகாயமுற்றதாக - ஆய்வுரையில் தரப்பட்டிருக்கிறது.

-

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை என்ற இடத்தில் இந்த ஆய்வுரையில் உள்ளபடி முகமதியர்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே பெருத்த கலவரம் மூண்டது. 10-1-1979 அன்று இங்கே பேசிய முஸ்லிம் லீக் உறுப்பினர் அவர்கள், இஸ்லாமியர்கள் என்று இருக்கவேண்டும் அல்லது முஸ்லிம் என்றிருக்கவேண்டும், அப்படியல்லாது முகமதியர்கள் என்று பெயர் மாற்றுவதாக இருந்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார்கள். அதையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே 1979ஆம் ஆண்டு சூன் திங்கள் பல மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினர் நான்குமுறை