பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

காவல்துறை பற்றி

பிறந்தவர்களுக்கும் சண்டை இல்லை. அதைப்போலவே தோளிலே பிறந்தவர்களுக்கும் சண்டை இல்லை. அதைப் போலவே, தொடையிலே பிறந்த உயர்ஜாதிக்காரர்களுக்கும், காலிலே பிறந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சண்டை இல்லை, இவ்வளவு சம்பவங்களை கோர்த்து எடுத்து பார்ப்போமேயானால், இந்தத் தகராறுகள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலேதான் நடைபெற்று வருகின்றன. எனவேதான் சமுதாயத்திலே ஒரு பெரிய மறுமலர்ச்சி ஏற்படுத்த, இப்படி பல்வேறு வருணங்களை, ஜாதிகளைப் பிரித்துவைத்த உயர்ந்த ஜாதிக்காரர்கள் இன்றைக்கு இதுபோன்ற அமளிகளிலே ஈடுபடாவிட்டாலும், அவர்கள் என்றைக்கோ ஊன்றிய இந்த வகுப்புவாத விஷவித்து இன்றைக்கு கடுமையாக வேலை செய்வதன் காரணத்தினால், ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட நிலையிலே இருக்கின்ற சமுதாய மக்களும், தாழ்த்தப்பட்ட நிலையிலே இருக்கின்ற மக்களும்தான் தங்கள் கைகளிலே வேல் ஏந்தி, வாள் ஏந்தி, கத்தி ஏந்தி, கட்டாரி ஏந்தி, வீடுகளைக் கொளுத்தவும், ஆட்களைக் கொல்லவும், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதன் மூலம் ரத்தம் சிந்தக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்குப் பரவலாக இந்திய தரணி முழுவதும், குறிப்பாக, தமிழ் நாட்டிலே பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது, எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மோதிக்கொள்கிறார்கள். இருவரும் பிற்படுத்தப்பட்டவர்கள். பூராணீகர் கருத்துப்படி, இருவரும் காலிலே பிறந்தவர்கள், ஒரு ஒரு கால் கால் இன்னொரு காலை உதைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டை இடுகின்ற சங்கடமான, கொடூரமான சூழ்நிலை இருக்கிறது. இதில் அரசினை மாத்திரம் குற்றஞ்சாட்டிக் கூறிவிடமாட்டேன். இதற்கு அரசாங்கத்தை நடத்துகின்றவர்கள் மாத்திரம் அல்லாமல். தமிழகத்திலே இருக்கின்ற எல்லாக் கட்சியைச் சேர்ந்த எல்லா உறுப்பினர்களுக்கும், எல்லா கட்சிகளையும் சார்ந்த தலைவர்களுக்கும் பொறுப்புண்டு; மிகப் பெரிய கடமை இருக்கிறது என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை மீண்டும் ஏற்றுக்கொண்டு. பொறுப்புக்கு வந்த இந்த இரண்டு மாத