பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

317

நம்முடைய முதலமைச்சர் கையெழுத்திட்டு வழங்கியுள்ள ஆய்வு அறிக்கையில் 67ஆம் பக்கத்திலே நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "4-1-1980ஆம் நாளன்று தி. மு. க. ஊர்வலத்தின் கடைசிப் பகுதியினர் சாலையைக் சாலையைக் கடந்து செல்வதற்காக (மதுரை தெற்கு) மதுரையில் சாலைச் சந்திப்பு ஒன்றில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.” அதாவது தி.மு.க. ஊர்வலம் சாலையைக் கடந்து செல்வதற்கு அ. இ. அ. தி. மு. க. தொண்டர்களைக் காவல் மு.க. துறையினர் தடுத்து நிறுத்தினர். “அவ்வாறு செய்கையில் குழப்பம் று ஏற்பட்டது. சில சமூக விரோதிகள் இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்டு தி. மு. க. கழக ஊர்வலத்தினர் மீது கற்களை வீசினர்." சமூகவிரோதிகள் யார் என்பதைத்தான் கண்டுபிடித்தாக வேண்டும். தடுத்து நிறுத்தப்பட்ட ஊர்வலம் அ. இ. அ. தி. மு. க. ஊர்வலம். அப்படித் தடுத்து நிறுத்தியபோது குழப்பம் ஏற்பட்டது என்று முதலமைச்சர் கையெழுத்திட்ட ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. "அந்தக் குழப்பம் ஏற்பட்டபோது சில சமூக விரோதிகள் இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்டு தி. மு. க. வினரும் எதிர்த்துக் கற்களை வீசினர். காவல் துறையினர் குறுக்கிட்டு ஒழுங்கை ஏற்படுத்தினர். இக்கலகத்தில் காங்கிரஸ் (இ), தி. மு. க. தேர்தல் அலுவலகங்களும் அலங்கார வளைவுகளும் கொளுத்தப்பட்டன. சில கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முறையான எச்சரிக்கை விடுத்தபின்னர் 15 டுத்தபின்னர் 15 கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அக்கூட்டத்தினர் மிகவும் வன்முறையில் ஈடுபட்டு காவலர்களை அச்சுறுத்தும் வகையில் தொல்லை ஏற்படுத்தினர். அதன்பேரில் காவலர்கள் தடியடி செய்தனர். இதுவும் பலனளிக்காமல் போகவே 5 சுற்று ஊமைக்காயம் ஏற்படுத்தும் தோட்டாக்களைக் கொண்டு சுட்டனர். இதில் லூர்த்ராஜ் (அ. இ. அ. தி. மு. க.), குட்டி மு.க.), என்னும் குட்டி ஜெயப்பிரகாஷ் (இ. க. க.) ஆகியோர் இறந்தனர். இவ்வனைத்துச் சம்பவங்களிலும் 35 காவலர்களும் கூட்டத்தினை மீறிய கும்பலைச் சேர்ந்த 38 பேரும் காயமடைந்தனர்." என்று இந்த ஆய்வு அறிக்கையில் முதலமைச்சர் கையெழுத்திட்டு மன்றத்திலே வைக்கப்பட்டிருக்கிற குறிப்பேட்டிலே ஏற்றப்பட்டுள்ள இந்த அறிக்கையில் காணப்படுகிறது. ஆனால் அந்தச் சமூக விரோதிகள் யார் என்பதைத்தான் நாம் அறிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். அதைப்பற்றி அப்போது மதுரையிலே இருந்த