பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

காவல்துறை பற்றி

டி.ஐ.ஜி. டி. ஐ. ஜி. ஒரு பேட்டியிலே கூறியிருக்கிறார். அதெல்லாம் பத்திரிகைகளிலே வந்திருக்கிறது. டி. ஐ. ஜி. ராஜசேகரன் நாயர் என்பவர் அளித்த பேட்டியில் கூறியது.

அன்று இரண்டு அணிகள், அதாவது தி.. மு. க., காங்கிரஸ் (இ) அணியும் அ. இ. அ. தி. மு. க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணியும் ஊர்வலங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. முதல் அணி, அதாவது தி. மு. க., காங்கிரஸ் (இ) அணி காலையிலேயும், மற்றொரு அணி பிற்பகலிலேயும் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டாவது அணியினர், அதாவது அ. இ. அ. தி. மு.க. அணியினர் தங்களுக்கு ஊர்வலம் துவக்க அனுமதி அளிக்கப்பட்ட நேரத்திற்கு நெடுநேரத்திற்கு முன்பே ஊர்வலத்தைத் துவங்கினார்கள். அதுமாத்திரமல்லாமல் எந்த இடத்திலே ஊர்வலம் தொடங்கவேண்டுமென்று அனுமதி அளிக்கப்பட்டதோ அந்த இடத்திலே துவங்காமல் வேறு இடத்திலிருந்து புறப்பட்டனர். முதலாவது அணியினர், அதாவது தி. மு. க., காங்கிரஸ் (இ) அணியினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியின்படி ஊர்வலத்தை நடத்தினார்கள். இரண்டாவது அணியினர், அதாவது அ. இ. அ.தி. மு. க., அணியினர் மு.க., அவர்களுடைய செயல், வழங்கப்பட்ட அனுமதிக்கு மாறுபட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி கலைந்துசெல்லுமாறு போலீசார் கூறியபோது ஊர்வலத்தை நடத்திய அந்த தலைவர்கள் அதற்கு இணங்க மறுத்துவிட்டார்கள். மீண்டும் மீண்டும் காவல் துறையினர் விடுத்த வேண்டுகோள் பயன் அற்றுப் போய்விட்டன. ஊர்வலத்தினர் காவலரையும் சப்இன்ஸ்பெக்டரையும் தாக்கினார்கள். தாக்குதலுக்கு உள்ளான காவல் துறையினர் நிலைமையைச் சமாளிக்கவும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் தடியடி நடத்தினர். அப்போதும் ஊர்வலம் கலைந்துசெல்லாமல் தாக்குதலைத் தொடர்ந்து செய்யவே காவல் துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். அதன்பிறகு துப்பாக்கிப்பிரயோகம் செய்ததிலே இருவர் இறந்தனர் என்று டி. ஐ. ஜி. பேட்டியிலே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நான் இதைச் சொல்வதற்குக் காரணம் இந்தச் சம்பவம் நடைபெற்றது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபொழுது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் நேரம். அந்த நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் போலீஸ் டி. ஐ. ஜி.,