பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

31

உயர்திருவாளர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்கள் கையில் இருந்த அந்த இலாகா இப்போது கனம் திரு. கக்கன் அவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக நான் உணரவில்லை. அந்த இலாகாவை ஒரே சக்திதான் இன்றையதினம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் உணருகிறேன். இந்த இலாகாவிலே இருக்கிற குறைபாடுகளையும், இந்த இலாகாவிலே பணி புரிகின்ற போலீஸ் அதிகாரிகள், போலீஸ் நண்பர்களுக்கு இருக்கின்ற உளைச்சல்களையும், அவர்களுக்குத் தேவையான வீட்டு வசதி, குடும்ப வசதி இவைகளுக்குத் தேவையானவை பற்றியும் இந்த மாமன்றத்தின் மூலமாக எடுத்துச் சொல்லுவது முறை என்ற காரணத்தால்தான் அந்தக் குறைபாடுகளை எல்லாம் இந்த மானியக் கோரிக்கை வருகின்ற காலத்திலே எல்லாம் எதிர் கட்சிக்காரர்களால் எடுத்துச் சொலலப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ம் போலீஸ்

லாகாவைப்

பாராட்டினார்கள். இந்தப் பாராட்டுகளினால் தம்முடைய வாழ்வு குளிர்ந்துவிட்டது, வறுமை நீங்கிவிட்டது என்று எண்ணி போலீஸ் நண்பர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.

ஒரு போலீஸ்காரருக்குத் தரப்படுகின்ற மாத சம்பளம், அவர்களுக்குத் தரப்படுகின்ற யூனிபாரம் அலவன்ஸ், வைத்திய வசதிகள், கல்வி வசதிகள் இவ்வளவும் சேர்ந்து ஒரு போலீஸ்காரருக்கு மாதத்திலே கிடைக்கின்ற பெரும் தொகை ஏறத்தாழ 102 ரூபாய்தான். அந்த 102 ரூபாயில் அவர்கள் இந்தக் காலத்திலே தங்களுடைய வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் செல்ல முடியுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுக்குக் கட்டிக் கொடுக்கிற வீட்டை நான் வீடு என்று கூற மாட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், போலீஸ்காரர்களுடைய கூடு என்றுதான் குறிப்பிட வேண்டும் அப்படிப்பட்ட சிறிய இடங்களில் அவர்கள் இன்றையதினம் தள்ளி அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குடியிருப்பு வசதிகள் பெருக்கப்பட வேண்டும், கட்டிக் கொடுக்கப்படுகிற வீடுகளில் மேலும் வசதிகளை அதிகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை இந்த மாமன்றத்திலே பல தடவை எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.