பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

321

ஆண்டு மார்ச்சு மாதம் 13ஆம் நாள் வரை செய்த வேலை நிறுத்தத்தின்போதும் சேலம் பள்ளிப்பாளையம் சேஷசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1979ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ஆம் நாள் முதல் 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் நாள் வரை வேலை நிறுத்தத்தின் போதும், சட்டம் ஒழுங்கை குறைக்கும் வண்ணம் அவர்கள் நடந்துகொண்டனர்.”

யார் ? தொழிலாளிகள். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க முன்னேற்ற சங்கப் பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தொழிற்சங்கப் பிரிவு ஆகிய இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களெல்லாம் சட்டம் ஒழுங்கைக் குறைக்கும் வண்ணம் நடந்துகொண்டார்கள். அந்த இரு நிறுவனங்களிலும் உண்மை ஊழியர்கள், தாக்கப்பட்டார்கள். இந்த ஊழியர்களால் - வேலை நிறுத்தம் செய்தவர்களால் அந்த நிறுவனத்திலே உள்ள உண்மை ஊழியர்கள் தாக்கப்பட்டார்களாம். நம்முடைய முதலமைச்சர் தருகின்ற ஆய்வுரை இது. தொழிலாளர்களுக்காக பரிந்து பேசுகின்ற ஆட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சியின் சார்பாக வைக்கப்பட்டுள்ள ஆய்வுரையில் உண்மையான ஊழியர்கள், விஸ்வாச ஊழியர்கள் கம்யூனிஸ்டு களுடைய மொழியிலே சொல்வோமேயானால் கருங்காலிகள் தாக்கப்பட்டார்கள் என்பதற்காக வருத்தம் தெரிவிக்கப்பட்டு 'அத்தொழிற்சாலைகளின் சொத்துக்கள்மீது கல்லெறியப்பட்டது. இந்த. . . எல்லாச் சம்பவங்களின்போதும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தனர்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இங்கேதான் நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 'இந்த எல்லாச் சம்பவங்களின்போதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை

எடுத்தனர்.

தோழர் உமாநாத் அவர்கள் இந்த மன்றத்திலே இந்த சிம்கோ மீட்டர்ஸ் போராட்டம் நடைபெற்றபொழுது ஒன்றைக் குறிப்பிட்டார்கள், சிம்கோ மீட்டர்ஸ் போராட்டத்திலே, வேலை நிறுத்தத்திலே ஈடுபட்டிருக்கிற தொழிலாளிகளை கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்திலே ஈடுபட்டிருக்கிற தொழிலாளிகளை நிர்வாகத்தினுடைய ஆட்கள் அல்லது குண்டர்கள் தாக்குகிறார்கள்.