322
காவல்துறை பற்றி
அப்படி தாக்கிய சிலபேரை அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி கைதுசெய்து ஜீப்பிலே அழைத்துக்கொண்டு போனார். அப்படி அவர்களைக் கைது செய்து ஜீப்பிலே அழைத்துக்கொண்டு போனார் என்பதற்காக மறுநாளே அந்த போலீஸ் அதிகாரி திருச்சியிலேயிருந்து மாற்றப்பட்டுவிட்டார். இது நியாயம்தானா நேர்மைதானா என்று தோழர் உமாநாத் அவர்கள் இந்த மாமன்றத்திலே முழக்கம் இட்டது இன்னமும் என்னுடைய காதுகளிலே ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அறிக்கையிலே என்ன சொல்லப்படுகிறது ? 'இந்த எல்லா சம்பவங்களின்போதும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தனர்' என்று சொல்லப்படுகிறது. நான் கேட்கிறேன் உரிய நடவடிக்கை எடுத்த காவல் துறை அதிகாரிதானே அந்த டி. எஸ். பி. உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அவர் வேறிடத்திற்கு மாற்றப் பட்டதற்குக் காரணம் என்ன ? அன்று திரு. உமாநாத் அவர்கள் எழுப்பிய கேள்வியை இன்றைக்கு அவர் எழுப்பாவிட்டாலும் அவர் சார்பாக நான் எழுப்புகிறேன். அவர் என்னை மன்னித்துக்கொள்வார் என்று நான் கருதுகிறேன். ஆக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா ? உண்மைத் தொழிலாளிகள் அங்கே தாக்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையிலே உண்மை ஊழியர்களைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுத்ததற்காக அந்தப் போலீஸ் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட சம்பவங்களையெல்லாம் நாம் மறந்துவிடுவதற் கில்லை. இவையெல்லாம் கடந்த கால ஆட்சியிலே 1979-80-லே நடைபெற்ற சம்பவங்களாகும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையாகும்
காவல் துறையினர் கிளர்ச்சி பற்றியும் விளக்கி இந்த ஆய்வுரையிலே கூறப்பட்டிருக்கிறது. இங்கே பல உறுப்பினர்கள் காவல் துறையினர் கிளர்ச்சி பற்றி பேசிவிட்டதால் நான் அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை. காவல் துறையினருடைய கிளர்ச்சியைப்பற்றி இந்த ஆய்வுரை என்ன கூறுகிறது ? ஆனால் முதலமைச்சருடைய தேர்தல் நேரத்து வாக்குறுதிகள் எவ்வாறு இருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. பக்கம் 56-57-ல் காவலர் கிளர்ச்சி பற்றி முதலமைச்சர் குறிப்பிடுகிறார். அதில் 'திரு. நயினார்தாஸ் நிபந்தனையோடு ஜாமீன் பேரில் வேலூர் மத்திய சிறையிலிருந்து 1979-ஆம்